கால்பந்து உலகில் வரலாற்று சாதனையைக  ரூ.1680 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் பிரேசிலை சேர்ந்த பிரபல பார்சிலோனா கால்பந்து வீர்ர் நெய்மர்.  அவரை  பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி ரூ.1680 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இது கால்பந்து விளையாட்டு உலகில் வரலாற்று சாதனையாக கூறப்படுகிறது.

ஸ்பெயினின் பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த நெய்மர், அந்த அணியில் இருந்து விலகி  பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் அணிக்கு மாறியுள்ளார். அதைத்தொடர்ந்து,  பாரீஸ் நகரில்  நடைபெற்ற நிகழ்ச்சியில்,  பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் உரிமையாளர் நாசர் அல் கெலபியுடன் உற்சாக போஸ் கொடுத்துள்ளார்.

நெய்மரை பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் அணி நெய்மரை,  இந்திய பண மதிப்பு படி சுமார் ரூ.1680 கோடிக்கு(222 மில்லியன் யூரோ) 5 ஆண்டுகள் காலம் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளது.

2017ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் அணிக்கு நெய்மர் விளையாடுவார் என்று ஒப்பந்ததத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு வாரம் ஒன்றுக்கு சுமார்  4 கோடி ரூபாய் பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

உலக கால்பந்து வரலாற்றில், இதுபோன்ற அதிக அளவு தொகை எந்தவொரு வீரரையும் ஒப்பந்தம் செய்தது இல்லை என்று கூறப்படுகிறது. எனவே, நெய்மரின் ஒப்பந்தம் கால்பந்து வரலாற்றில் புதிய வரலாற்று சாதனையை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

நெய்மர் இவ்வளவு பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது பல்வேறு சர்ச்சைகளை  எழுப்பி உள்ளது. இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஒரு வீரரை ஒப்பந்தம் செய்வது ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎப்ஏ) கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு ஏற்றதாக உள்ளதா என்று லா லிகா மற்றும் பார்சிலோனா கிளப்கள் புகார் கூறியுள்ளன.

கடந்த ஆண்டு  ஆகஸ்டில் பால் போக்பா என்ற வீரர் யுவண்டஸ் அணியிலிருந்து மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு 105 மில்லியன் யூரோக்கள் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதே அதிக தொகையாக இருந்து வந்தது,

தற்போது, நெய்மரின் ஒப்பந்தம் அதை முறியடித்து சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து நெய்மர் கூறியதாவது,

“பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியுடன் இணைவதில் தான் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ள அவர், இந்த கிளப் சவாலானது, லட்சியங்கள் கொண்டது என்று கூறியுள்ளார்.

இனிமேல் எனக்கு  ரசிகர்கள் விரும்பும் கோப்பைகளை வென்று தருவதே என் வேலை என்றும், இன்றுமுதல் எனது புதிய அணி சகாக்களுக்கு  உதவுவதே என் கடமை என்று கூறினார்.

மேலும்,  உலகம் முழுதும் இருக்கும் இந்த கிளப் ரசிகர்களுக்கு புதிய எல்லைகளைக் காட்ட விரும்புகிறேன்” .

இவ்வாறு நெய்மர் கூறி உள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலக கோப்பை விளையாட்டின்போது, காலிறுதியில் பிரேசில் அணி, கொலம்பியாவுடனான போட்டியின்போது,  கொலம்பிய  வீரர் ஜுனிகா, தனது முழங்காலால் பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மரை தாக்கி கீழே தள்ளினார்.

இதில், முதுகெலும்பு முறிந்த நெய்மர், தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறினார். அப்போது,  உலக கோப்பை பைனலில் விளையாட வேண்டும் என்ற எனது கனவை ‘திருடி’ விட்டனர்,’’என, நெய்மர் உருக்கத்துடன்  தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.