டெஸ்ட் மேட்ச்சில் 150 விக்கெட் எடுத்து ஜடேஜா புதிய சாதனை!

கிரிக்கெட் டெஸ்ட் விளையாட்டில் 150 விக்கெட்டுக்கள் எடுத்து இந்திய கிரிக்கெட்  பந்துவீச்சாளர் ஜடேஜா புதிய சாதனை படைத்துள்ளார்.

இதுவரை அவர் விளையாடி உள்ள 32 டெஸ்ட் மேட்ச்சில் 150 விக்கெட்டுக்ளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அவருக்கு சக வீரர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

28 வயதாகும் ஜடேஜா 2012-ம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

இடதுகை ஆட்டக்காரரான ஜடேஜா  இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்கிறார். ஐசிசி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.

ஏற்கனவே தர்மசாலாவில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது (30-வது டெஸ்ட் போட்டி)   1000 ரன்கள், 100 விக்கெட்டுகளைக் கடந்து ரவீந்திர ஜடேஜா சாதனைப் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது
English Summary
Jadeja fastest left arm bowler to take 150 wickets in test match 32 matches