டில்லி

களிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும்  நிறைவேறியது.

மகளிருக்கு மக்களவை மற்றும் மாநிலச் சட்டசபைகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா, நேற்று முன்தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. நேற்று மாநிலங்களவையில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டு மசோதா மீது பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசினர்.

இந்த மசோதாவை, காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மசோதாவை ஆதரித்துப் பேசினர்.  பிரதமர் மோடி நேற்று இரவு மாநிலங்களவைக்கு வந்து இந்த மசோதா குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்

மாநிலங்களவையில் 7 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த விவாதங்கள் நிறைவடைந்த நிலையில், இரவில் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவுக்கு ஆதரவாக 215 உறுப்பினர்கள் வாக்களித்தனர் இதற்கு  யாரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை.  எனவே இந்த வாக்கெடுப்பின் மூலம் மாநிலங்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஒருமனதாக நிறைவேறியது.