டில்லி

டில்லி மெட்ரோ ரயில் கதவில் ஒரு பெண்ணின் சேலை சிக்கி அவர் தண்டவாளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

டில்லியின் வீர் பண்டா பைரஹி மர்க் பகுதியை சேர்ந்த 35 வயதுப் பெண் ரீனா (கணவரை இழந்து12 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர். இவர் பைரஹி மர்க் பகுதியில் காய்கறி விற்பனை தொழில் செய்து வந்தார்.

, கடந்த வியாழக்கிழமை ரீனா தனது மகனை அழைத்துக்கொண்டு இண்டர்லாக் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்று மெட்ரோ ரயிலில் ரீனா ஏறியுள்ளார். தனது மகன் ரயிலில் ஏறாததைக் கண்ட ரீனா ரயிலில் இருந்து இறங்க முயற்சித்துள்ளபோது, மெட்ரோ ரயிலின் கதவு மூடியுள்ளது. இதில், ரீனாவின் சேலை கதவில் சிக்கிக்கொண்டது.

அதிர்ச்சியடைந்த ரீனா சேலையை கதவில் இருந்து எடுக்க முயற்சித்துள்ளார்., அதற்குள் மெட்ரோ ரயில் புறப்பட்டதால் ரீனா சில மீட்டர்கள் இழுத்துச் செல்லப்பட்டு மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் விழுந்துள்ளார்., அவர் மீது மெட்ரோ ரயில் ஏறியது.

படுகாயமடைந்த ரீனா மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரை சிகிச்சைக்கு அனுமதிக்க 3 மருத்துவமனைகள் மறுத்துவிட்டன. ரீனா இறுதியாக டில்லி சப்தர்கஞ்ச் மருத்துவமனையில் ரீனா அனுமதிக்கப்பட்டார்.

அவருக்குத் தலை மற்றும் உடல் பகுதியில் ஏற்பட்ட கடுமையான காயங்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரீனா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.