அரசு மருத்துவமனை அலட்சியம்: கழிவறையில் குழந்தை ஈன்ற பெண்

Must read

மலப்புரம் : அரசு மருத்துவமனையின் அலட்சியம் காரணமாக,  பெண்மணி ஒருவர், கழிவறையில் குழந்தையை ஈன்ற கொடுமை கேரளாவில் நடந்துள்ளது.

கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள மஞ்சேரி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கர்ப்பிணிப்பெண் ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவம் பார்ப்பதில் அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அலட்சியம் காட்டினர். தனக்கு கடுமையான இடுப்புவலி ஏற்பட்டுள்ளது என்று அந்த பெண்மணி கதறியபோது, “சிறுநீர் கழித்தால் சரியாகிவிடும். கழிப்பறைக்கு போ” என்று விரட்டியுள்ளனர்.

வேறு வழியின்றி கழிப்பறை சென்ற அந்த பெண், அங்கேயே குழந்தையை ஈன்றார்.

இந்த சம்பவம் கேரளாவில் பலத்த அதிரச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியும் இச்சம்பவத்துக்கு கண்டணம் தெரிவித்துள்ளார்.

தற்போது மலப்புரம் மாவட்ட மருத்துவ அதிகாரியிடம் இது குறித்து அறிக்கை கேட்டிருப்பதாக கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார். மேலும், அலட்சியம் காண்பித்த மருத்துவர் மற்றும் செவிலியல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article