லக்னோ:

குடும்ப சண்டை காரணமாக உ.பி. சமாஜ்வாதி கட்சியில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அகிலேஷ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், அகிலேசின் சித்தப்பா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாஜ்வாதி கட்சியில் இருந்து அகிலேஷ் நீக்கப்பட்டதை முலாயம்  வாபஸ் பெற்றதை தொடர்ந்து கட்சியின் தற்போதைய சூழ்நிலை சகஜநிலைக்கு திரும்பிவிடும் என்றும் எண்ணியிருந்த நேரத்தில், கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

சமாஜ்வாடி கட்சியில் முலாயம் சிங் தம்பியான சிவ்பால் சிங்குக்கும், முதல்வர் அகிலேசுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து சமாஜ்வாதி கட்சி கலகலத்து வருகிறது.

அதைத்தொடர்ந்து முலாயம் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் தனது ஆதரவாளர்கள் பெயர் இல்லை, அவர்கள் பெயரை அறிவிக்க வேண்டும்  என்று கூறி அகிலேஷ் தனது தந்தையான முலாயமுடன் வாக்குவாதம் செய்தார். ஆனால் முலாயம் அவரது கோரிக்கையை பரிசீலிக்க முயாது என்று மறுத்துவிட்டார்.

இதன் காரணமாக தந்தை, மகன் இடையே மோதல் முற்றியது. அகிலேசுக்கு ஆதரவாக 200க்கும் மேற்பட்டசமாஜ்வாதி  எம்.எல்.ஏ.க்கள் மற்றும்  எம்.பி.க்கள், மேல்சபை உறுப்பினர்கள்  ஆக 229 பேர்மா, மேலும் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள், மாவட்ட  செயலாளர்கள்  பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்தனர். இவர்களுடன் அகிலேஷ் தனது வீட்டில் கூடி ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து அகிலேஷ் மற்றும் அவரது ஆதரவாளரான ராம்கோபால் வர்மா உள்பட 229 பேரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி கட்சி தலைவர் முலாயம் நடவடிக்கை எடுத்தார்.

அகிலேஷ் – சிவ்பால் – முலாயம்

இது கட்சியினரிடையே மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. உ.பி. அரசியல் திகுதிகுவென பற்றி எரிய தொடங்கியது.  அகிலேஷ்  வீடு முன்  அவரது ஆதரவாளர்கள் குவியத் தொடங்கினர்.

இதையடுத்து அகிலேஷ் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அடுத்து என்ன  முடிவு எடுக்கிறார்?  செய்ய போகிறார் என்ற பரபரப்பு ஏற்பட்டது.

இதை சற்றும் எதிர்பார்க்காத கட்சி தலைவர் முலாயம் தனது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர் களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

சட்டசபை தேர்தல் அறிவிப்பை எதிர்பார்த்து கொண்டி ருக்கும் வேளையில் கட்சிக்குள் பிரச்சினை வேண்டாம் என எண்ணி, அகிலேஷ், ராம்கோபால் யாதவ் உள்பட 229 பேரை கட்சியில் இருந்து நீக்கிய உத்தரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

சிவ்பால் யாதவ்

அதைத்தொடர்ந்து நடைபெற்ற சமாஜ்வாதி கட்சியின்  தேசிய கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவ ராக அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ராம்கோபால் யாதவ் அறிவித்தார். மேலும் கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து ஷிவ்பால் யாதவை நீக்க வேண்டும் என ராம்கோபால் யாதவ் கூறினார்.

ஆனால், இதுகுறித்து கட்சி தலைவர் முலாயம்சிங் ,  நடந்து முடிந்த செயற்குழுக் கூட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என தெரிவித்தார்.

இதற்கிடையில் சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து ஷிவ்பால் யாதவ் நீக்கம் மற்றும் அமர்சிங் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லக்னோவில் நடந்த அகிலேஷ் யாதவ் தலைமையில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து ஷிவ்பால் யாதவ், அமர்சிங் நீக்கபட்டுள்ளார். மேலும் கட்சியின் தேசியத் தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மீண்டும் சமாஜ்வாதி கட்சி பிரச்சினை கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.

இதையடுத்து வரும் தேர்தலில் காங்கிரசுடன் அகிலேஷ் கூட்டணி சேர்ந்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வார் என தெரிகிறது.

இந்த செய்தியை முதன்முதலாக கடந்த மாதமே வெளியிட்டது பத்திரிகை.காம் என்பது குறிப்பிடத்தக்கது.