பாரிஸ்

பாரிஸ் நகரின் நோட்ரெ டாம் தேவாலயம் தீப்பிடித்து எரியும் போது அதில் ஏசு கிறிஸ்து உருவம் தெரிந்ததாக சமூக ஊடகங்களில் பதியப்பட்டுள்ள்ன.

நேற்று முன் தினம் மாலை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள நோட்ரெ டாம் தேவாலயத்தில் கடுமையான தீபத்து ஏற்பட்டது. இதில் தேவாலயத்தின் மேற்கூறை, கோபுரம் உள்ளிட்ட பல இடிந்து விழுந்தன. இது உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறித்துவர்களுக்கு மிகந்த மனத்துயரத்தை உண்டாக்கி உள்ளது.

இந்நிலையில் ஸ்காட்லாண்ட் நாட்டில் மேற்கு துன்பார்டன்ஷைன் நகரில் வசிக்கும் லெஸ்லி ராவன் என்னும் பெண் சமூக ஊடகமான முகநூலில் ஒரு பதிவு வெளியிட்டார். அவர் தாம் இந்த தீவிபத்து குறித்த வீடியோவை பார்த்துக் கொண்டிருந்த போது அந்த தீபிழம்பு மற்றும் புகைகளுக்கிடையே ஏசு கிறிஸ்து தெரிந்ததாக பதிந்துள்ளார்.

அத்துடன் 850 ஆண்டுகளுக்கு மேலாக அந்த தேவாலயத்தில் தங்கி இருந்த ஏசு கிறிஸ்து தற்போது தீ விபத்தினால் வெளியே சென்றுள்ளதாகவும் அந்த காட்சியே இவ்வாறு பதிவாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில் வெளியுட்டுள்ள புகைப்படங்களில் ஏசு கிறிஸ்து தெரிவதை வட்டமிட்டு காட்டி உள்ளார்.

அவருடைய பதிவில் பலர் அந்த பதிவில் ஏசு கிறித்து தெளிவாக தெரிவதாக பின்னூடம் இட்டுள்ளனர். ஆனால் ஓரிருவர் அதை தங்கள் பின்னூட்டத்தில் மறுத்துள்ளனர். ஒருவர் அங்கு ஏதோ ஒரு ஏசுகிறிஸ்து சிலை தீப்பிடித்து எரிந்துள்ளது. அது இவ்வாறு கண்ணுக்கு தெரிகின்றது” என கூறி உள்ளார்.