கூகிள் நிறுவனம் தேடுபொறி மூலம் வளம் கொழிக்கும் நிறுவனமாக மாறி இன்று பல  சேவைகளை இலவசமாக கொடுத்துவருகிறது. இலவசமாக கொடுத்தாலும் விளம்பரம் பணம் ஈட்டும் நிறுவனமாக இன்றும் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.

இந்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக கூகிள் நிறுவனத்தின் இலவச சேவைகள் எல்லாமே குறைந்த கட்டணமாக மாறிவருகிறது. இப்போது கூகிள் மேப்பில் விளம்பரச் சேவையை கொண்டு வந்துள்ளது.

ஊபர், ஓலா,  என பல போக்குவரத்து சேவை செயலிகளும், சிறு, குறு போக்குவரத்து செயலிகள்  முதற்கொண்டு ஒரு நாளைக்கு கூகிள் மேப் ஐ திறக்காதவர்கள் வெகு குறைவே. இப்போது அதில்தான் விளம்பரங்களை கொடுத்து அதன் மூலம் விளம்பர வருவாய் ஈட்ட கூகிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது போல் தெரிகிறது.

ஆனால் இதில் தனிநபர் கட்டுப்பாடு (பிரைவசி பாலிசி) கூகிள் நிறுவனத்திற்கு  சிக்கல்களை கொடுக்கும் . இப்போதே கூகிள் நிறுவனத்திடம் நான் நாள் முழுதும் எங்கே சென்றோம்,. எங்கே பேசினோம், எந்த கடைக்குச் சென்றோம் என்றெல்லாம் விபரங்கள் இருக்கும்போது நாம் செல்லும் இடத்திற்கு ஏற்ப விளம்பரங்களை காட்டும்.

சில காலத்திற்கு  முன்பாகவே கூகி்ள் நிறுவனம் தனது சேவைகளை உள்ளூர் என்பதன் அடிப்படையில் மாற்றிக்கொண்டது. அதாவது இதற்கு முன் கூகிள் நிறுவனத்தின் தேடல் முடிவுகள் எல்லாமே சென்னையில் என்று கொடுத்தால் சென்னை முழுதும் மொத்தமாக வரும். ஆனால் இன்றோ சென்னையில் உள்ளே முக்கிய இடங்களில் உள் ள விபரங்களை எல்லாம் காட்டுகிறது எனும்போது அந்நிறுவனம் எப்படி தனி நபர்களை நோக்கி படிப்படியாக நகர்ந்துவருகிறது என்பதை  நாம் தெரிந்துகொள்ளலாம்.

100 பில்லியன் டவுன்லோடு கொண்ட கூகிள் மேப்பில் விளம்பரம் வரும்போது அதன் லாபம் மிக அதிகமாகவே இருக்கும். ஆனாலும் தனிநபர் பாலிசி வழியாக சிக்கல்கள் வரவும் வாய்ப்பிருக்கிறது

இப்போதைக்கு கூகிள், மேப்பில் விளம்பரம் வருவதை அவைகள் விளம்பரம் அல்ல என்று கூறியிருக்கிறது என்றாலும் விரைவில் விளம்பர வாய்ப்புகள் அதிகம். மேலும் இப்போதே கூகிள் மேப் மூலம் ஊர் அளவில் விளம்பரம் கொடுக்க வசதி இருக்கிறது. ஆனால் மேப்பில் நேரடியாக கொடுக்க இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை

-செல்வமுரளி