ராமேஸ்வரம்

ரும் 28 ஆம் தேதி பாம்பன் புதிய ரயில் பாலம் திறக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.

மண்டபத்தையும், ராமேசுவரத்தையும் இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் கட்டப்பட்டு உள்ள புதிய ரயில் பாலத்தின் உறுதி தன்மை குறித்து தொடர் ஆய்வுகள் நடை பெற்று வருகின்றன. இதையொடி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நடத்திய ஆய்வின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டன.  மேலும் இரும்பால் ஆன இணைப்பு பகுதியை செங்குத்தாக மேலே தூக்கி இறக்கி கப்பல்கள், ரயில்களை இயக்கி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இன்று காலை புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்வதற்காக தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் மற்றும் அதிகாரிகள் மண்டபம் வந்து அங்கிருந்து புதிய ரெயில் பாலத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதிகாரிகள் பாலத்தின் உறுதித்தன்மை, தூக்கு பாலத்தின் தரம் உள்ளிட்டவைகளை இறுதி கட்டமாக ஆய்வு செய்தனர். மேலு, ராமேசுவரம் ரயில் நிலையத்திலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் 28 ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக. இதற்கான ஏற்பாடுகளை பிரதமர் அலுவலகம் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. . பாலம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில், மண்டபம் மற்றும் பாம்பனில் அதற்கான ஏற்பாடுகளை ரயில்வே அதிகாரிகள் செய்து வருவதாக தெரிய வச்துள்ளது