சென்னை

ரிரு மாதங்களில் விரைவு மற்றும் அதி விரைவு ரயில்களுக்கு முன்பதிவில்லா டிக்கட் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே மேலாளர் கூறி உள்ளார்.

நாடெங்கும் கொரோனா பரவலையொட்டி மக்கள்  ஒரே இடத்தில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.  இதையொட்டி அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.  பிறகு கொரோனா குறைந்ததால் சிறிது சிறிதாக ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.   தற்போது விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ரயில்கள் அனைத்தும் தற்போது சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகின்றன.  எனவே இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.  ஆகவே அனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லா டிக்கட்டுகள் வழங்குவது அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.  தற்போது கொரோனா குறைந்து வருவதால் மீண்டும் முன்பதிவில்லா டிக்கட்டுகள் வழங்கக் கோரிக்கை எழுப்பப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.  அப்போது அவர், “இன்னும் ஓரிரு மாதங்களில் விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்களுக்கு மீண்டும் முன்பதிவில்லா டிக்கட் வழங்கப்படும்.    மேலும் கொரோனா பாதிப்பு குறைந்தால் நடைமேடை டிக்கட் விலை ரூ.50 லிருந்து மீண்டும் ரூ.10 ஆக மாற்றப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.