உத்தரப்பிரதேசம் : 5 வருடத்தில் கராத்தே சாம்பியன் வறுமையால் டீ விற்கும் அவலம்.

Must read

துரா

னது 23 வயதில் கராத்தே சாம்பியன் ஆன உத்தரப்பிரதேச வீரர் ஹரி ஓம் சுக்லா 28 வயதில் வறுமையால் தேநீர் விற்பனை செய்து வருகிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்த ஹரி ஓம் சுக்லா தனது 13-வது வயதில் இருந்து (2006ஆம் ஆண்டு) கராத்தே பயிற்சி பெற்று வருகிறார். இவர் தாய்லாந்தில் நடந்த போட்டியில் வென்றதன் மூலம் முதன் முதலில் சர்வதேசப் பதக்கத்தை வென்றார். கடந்த 2009ஆம் ஆண்டு மும்பையில் நடந்த சர்வதேசப் போட்டி ஒன்றில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

கடந்த 2013ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த சர்வதேசப் போட்டியில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.  அதன் பிறகு 2015ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த சர்வதேசப் போட்டியில் தங்கப் பதக்கமும், அதே போட்டியில் இன்னொரு பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.

ஆனால் தற்போது வறுமை காரணமாக ஹரி தேநீர் விற்றுக் கொண்டு இருக்கிறார்.  இது குறித்து அவர், “”எனக்கு எல்லாம் கனவு போல உள்ளது/. ஒரு தனியார் கல்வி நிலையத்தில் நான் வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த சம்பளம் என் கராத்தே ஆர்வத்துக்கு உதவியது. ஆனால், அவர்கள் சம்பளத்தை நிறுத்தினார்கள்.  எனவே பள்ளிக் குழந்தைகளுக்குக் கராத்தே பயிற்சி தர ஆரம்பித்தேன்.

அதுவும் ஊரடங்கில் நின்றுவிட்டது. எனவே இப்போது தேநீர் விற்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.  எனக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். எனக்கும் குடும்பச் செலவுகள் உள்ளன.என்னால்  இந்தச் சூழல் மாறும் வரை எப்படி வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்க முடியும்? இப்போது எனது பட்டப்படிப்பு சான்றிதழின் நகலைப் பெறுவதற்குக் கூட என்னிடம் பணம் இல்லை” எனகூரி உள்ளார்.

ஏற்கனவே  மதுரா பாஜக எம்.பி. ஹேமமாலினி, மாநிலத்தின் மின்சாரத்துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா ஆகியோரை சந்தித்து ஹரி உதவி கோரியிருந்தாலும் இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை.

ஹரியின் பயிற்சியாளர் அமித் குப்தா. ” விளையாட்டு வீரர்களுக்கு அரசு ஆதரவு வேண்டும் ஹரிக்கு ஏதாவது ஒரு பள்ளியில் ஹரிக்கு வேலை கொடுத்தால் அவர் தனது கராத்தே தாகத்தையும் தீர்த்துக் கொண்டு தடகள வீரர்களுக்குப் பயிற்சியும் தருவார்.

நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கராத்தே பிரிவு உள்ளது. ஆயினும், அமைப்புக்குள் இருக்கும் அரசியலால் இந்தியாவிலிருந்து எந்த விளையாட்டு வீரரும் இந்த பிரிவில் பங்கேற்கவில்லை. இந்த அரசியலால் கராத்தே  இந்தியாவில் அழியும் நிலையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

 

More articles

Latest article