க்ரைன் மீதான போர் இன்று 2வது நாளாக தீவிரமாகி உள்ள நிலையில், ரஷியாவின் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த ஏற்பதாக உக்ரைன் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

உக்ரைனில் இரண்டாவது நாளாக தீவிரமாக தரை, வான் மற்றும் கடல்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள ரஷியா, தலைநகர் கீவை- நெருக்கி உள்ளது. அங்கு இரு நாட்டு துருப்புகளுக்கும் இடையே பயங்கர மோதல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, உக்ரைனில் இருந்து  ஏராளமானோர் அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று திடீர் என  உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, உக்ரைன் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவை பேச்சுவார்த்தைக்கு வருமாறு  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைத்துள்ளார். இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் போர் முடிவுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்! ரஷ்யா திடீர் அழைப்பு – உலக நாடுகள் வியப்பு…