பீஜிங்

க்ரைன் விவகாரம் குறித்த் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் சீன அதிபர் ஜீ ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.

கடந்த 4 மாதங்களாகப் புகைந்துக் கொண்டிருந்த ரஷ்யா மற்றும் உக்ரைன் விவகாரம் தற்போது இரு நாடுகளுக்கிடையே போராக வெடித்துள்ளது.  நோட்டோ நாடுகள் அமைப்பில் உக்ரைன் இணைய விருப்பம் தெரிவித்ததற்கு ரஷ்யா தடை விதித்ததில் இருந்து இந்த விவகாரம் ஆரம்பித்து தற்போது ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளுக்குச்  சீனா ஆதரவ தெரிவித்தது.  இதையொட்டி அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் சீனாவுக்கு கண்டனம் தெரிவித்தன.  இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும்டன் தொலைப்பேசி மூலம் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார்.

அப்போது உக்ரைன் விவகாரம் குறித்து சீன அதிபர் ரஷ்ய அதிபருடன் பேசி உள்ளார்.  உக்ரைனுடன் சமாதான பேச்சு வார்த்தைகளை நடத்தச் சீன அதிபர் வலியுறுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.  அதற்கு ரஷ்ய அதிபர் ஒப்புதல் அளித்தாரா இல்லையா என்பது குறித்து இதுவரை தகவல் ஏதும் வெளியாகாமல் உள்ளது.