க்ரைனில் இன்று 2வது நாளாக  போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷியா, திடீரென பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்து உள்ளது. இது உலக நாடுகளிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைன் மீது ரஷியா நேற்று (பிப்ரவரி 24) காலையில்  ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.  சரமாரியான ஏவுகணைகளைக்கொண்டு தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, உக்ரைன் நாட்டு வான்வழிக் கட்டமைப்பு முழுமையாகக் கைப்பற்றி விட்டதாக  ரஷியா அறிவித்துள்ளது.  இன்று 2வது நாளாகவும் போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் படைகளை தாக்கிக்கொண்டே,  தலைநகர் கீவில்ரஷ்ய படைகள் ஊடுருவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் நள்ளிரவு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி,   எங்களுடன் இணைந்து போராட எந்தவொரு நாடும் தயாராக இல்லை, நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம் என்று கூறியதுடன், நாங்கள் கோழைகள் அல்லது, துணிந்து நிற்போம், தங்கள் வீரர்கள் யாரும் சரணடையவில்லை, இதுவரை வீரர்கள், பொதுமக்கள் என  137 பேர் இறந்துள்ளனர். 316 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று கூறியதுடன்,   நானும் எனது குடும்பத்தின ‘ரும் இன்னும் கீவில் தான் இருக்கிறோம். எங்கும் ஓடவில்லை என்று கூறியிருந்தார்.

மேலும், நேற்று இரவு ரஷிய அதிபர் புடினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதியும், போரை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும் பல நாடுகளும் ரஷியா போரை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வந்தன. அமெரிக்கா உள்பட சில நாடுகள் பொருளாதார தடைகளை அறிவித்தன.

இந்த நிலையில், திடீர் திருப்பமாக,  உக்ரைன் போரை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.  உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ ரஷ்ய படைகள் சூழ்ந்து தாக்கி வரும் நிலையில், போரை கைவிட தயார் என்று ரஷிய வெளியுறவுத்துறை திடீரென அறிவிப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் கீவ் நகரில் தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டு வருகிறது. உக்ரேனிய தலைவர் உதவிக்காக கெஞ்சும்போது ரஷ்ய துருப்புக்கள் கியேவில் முன்னேறின. இன்று தரை, வான் மற்றும் கடல் வழியாக உக்ரைன் மீது மாஸ்கோ முழு ஆக்கிரமிப்பை நடத்தியதை அடுத்து, ரஷ்யாவுடனான இராஜதந்திர உறவுகளை உக்ரைன் துண்டித்துள்ளது.  தொடர் குண்டு சத்தத்தால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் பெரும் பீதி அடைந்துள்ள நிலையில், ரஷியாவின் திடீர் அறிவிப்பு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கூறிய ரஷி வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், உக்ரைன் ராணும் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு ரஷியா தயாராக இருப்பதாகவும், உக்ரைனை ஒடுக்கு முறையில் இருந்து விடுவிக்கவே ரஷியா விரும்புகிறது என்று தெரிவித்துள்ளார்.

ரஷிய வெளியுறவுத்துறையின் இந்த திடீர் அறிவிப்பு உலக நாடுகளிடையே வியப்பை ஏற்படுத்தி இருந்தாலும்,  ஏற்கனவே உக்ரைன் எல்லையில் படைகளை குவித்த ரஷியா அங்கிருந்து வாபஸ் பெறுவதுபோல நாடகமாடி தாக்குதலை தொடங்கிய நிலையில், தற்போதைய போர் நிறுத்த அறிவிப்பும் சந்தேகக் கண்களோடு பார்க்கப்படுகிறது.