சென்னை:

மிழகத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு தனியார் நிறுவனம் மூலம் நீட் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இன்னும் நீட் பயிற்சிக்கான எந்தவித தகவலும் வெளிவராத நிலையில், கடந்த ஆண்டு நீட் பயிற்சி வழங்கியதற்கான தொகை இன்னும் கொடுக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2017ம் ஆண்டு நீட்பயிற்சி தொடக்க விழாவின்போது….

இதன் காரணமாகவே, தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு  நீட் பயிற்சி அளித்த தனியார் நிறுவனம் முன்வராத நிலையில் இந்தஆண்டு நீட் பயிற்சி வழங்கப்படுமா என்பது கேள்விக் குறியாகி உள்ளது.

‘தமிழகத்தில் நீட் மற்றும் மத்திய அரசின் பல்வேறு மேற்படிப்புகான  தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் 100 இடங்களில் பயிற்சி மையங்கள் தொடங்கப்படுவதற்கான ஒப்பந்தங்கள் கடந்த 2017ம் ஆண்டு  அக்டோபர் 25ந்தேதி அன்று கையெழுத்தாயின. அதைத்தொடர்ந்து, முதற்கட்டமாக கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 13ந்தேதி 100 பயிற்சி மையங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

அதையடுத்து தமிழக அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நீட் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு நீட் தேர்வு மே 5-ம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ள நிலையில் மார்ச் 25 முதல் மே 3 வரை நீட் பயிற்சி மையங்கள் மீண்டும் தொடங்கி நடைபெறும் என்றும், அதன் மூலம் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் பயிற்சி பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால், நீட் பயிற்சி வகுப்புகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.

இதுகுறித்து நீட் பயிற்சி அளித்து வரும் தனியார் நிறுவனமான ஸ்பீடு இன்ஸ்டிடியூட், ஏற்கனவே பயிற்சி கொடுத்து தொடர்பாக தமிழக அரசு ரூ.20 கோடி ரூபாய் தரவேண்டியது இருப்பதாகவும், இதுகுறித்து பல முறை தமிழக அரசுக்கு நினைவூட்டியும் இழுக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டி உள்ளது.

தமிழக அரசிடம் இருந்து ரூ.20 கோடி நிதி வராத காரணத்தால் நீட் பயிற்சி மையங்களை திட்டமிட்டபடி தொடக்க முடியவில்லை என்றும் கூறி உள்ளது.

இதன் காரணமாக இந்த ஆண்டு தமிழக அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நீட் பயிற்சி அளிக்கப் படுவது கேள்விக்குறியாகி உள்ளது.