சென்னை:
ரசு பள்ளி மாணவர்களின் நீட் தேர்வு விண்ணப்பக் கட்டணத்தை அரசே செலுத்துமா? என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.

சமூக அக்கறையுடன் கூடிய மாணவர்களை உருவாக்கி வரும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில், அன்பாசிரியர் 2.o என்னும் விருது வழங்கும் விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. தனியார் நாளிதழ் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று விருதுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், அரசு பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் கட்டணத்தை செலுத்தும் வகையில் ஆலோசனை நடத்தப்படும் எனவும், டெட் தேர்வு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிந்துள்ள நிலையில், காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். முன்னதாக டெட் தேர்வு விண்ணப்பிப்பதற்கான கால கெடுவை நீட்டிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.