அதிமுகவில் சசிகலா இணைக்கப்படுவாரா? கே.பி.முனுசாமி பதில்

Must read

சென்னை:
திமுகவில் சசிகலா இணைக்கப்படுவாரா? என்ற கேள்விக்கு அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி பதிலளித்துள்ளார்.

தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்துவார் என்று நினைத்த சசிகலா அரசியலை விட்டு விலகுவதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி அளித்துள்ள பேட்டியில், ” சசிகலாவின் முடிவு ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தி அடைய வழி வகுக்கும். ஜெயலலிதா ஆட்சி வரக்கூடாது என நினைப்பவர் டிடிவி தினகரன். ஜெயலலிதாவின் விசுவாசியாக இருப்பதாக சசிகலா கூறியதற்கு நான் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவில் சசிகலா இணைக்கப்படுவாரா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்” என்றார்.

More articles

Latest article