புனே:

பிரதமர் மோடி எப்போது அவரது கால்களுக்கு அரசியலில் இருந்து ஓய்வு கொடுக்கிறோரோ அப்போது, தானும் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று மத்திய ஜவுளித்துறை  அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் பொதுமக்கள் பல கேள்விகளை எழுப்பினர்.  அப்போது,  ஒருவர் பிரதமர் எப்போதும் தான் ஒரு சேவகன் என்று கூறுகிறாரே. அவர், மத்திய அரசு தலைவராக இருந்தும்  அவரது பங்கை விவரிக்க  முடியாமல் இந்த சொல்லை பயன்படுத்துகிறாரா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ஸ்மிருதி இரானி, அப்படி ஒருபோதும் இல்லை என்று மறுத்தவர், கேள்வி எழுப்பிய நபரை பார்த்து, நீ மோடியை நீண்ட காலமாக அரசியலில் இருக்கக்கூடாது என்று நினைக்கிறாய், ஆனால் நான் உனக்கு கூறுகிறேன்‘, மோடி நீண்ட காலமாக அரசியலில் ஈடுபடுவார் என்று கூறினார்.

பிரதமர் மோடி அரசியலை விட்டு ஓய்வு பெறும்போது, நானும் அரசியலில் இருந்து விலகி விடுவேன் என்றார்.

‘தான் நாட்டின் தலைசிறந்த தலைவரான வாஜ்பாய் தலைமையின் கீழ் அரசியல் பணியாற்றி இருக்கிறேன்.. அது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று தெரிவித்தார். அதுபோலவே தற்போது பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பணியாற்றி வருகிறேன் என்று தெரிவித்தார்.

உ.பி.  அமேதி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு, அதை பாஜக தேசிய தலைவர் அமித் ஷாதான் முடிவு செய்வார் என்று கூறினார்.

நான்  என்னுடைய நாட்டிற்காகவும், என் சமூகத்திற்காகவும்  எனது வாழ்நாளில் எவ்வளவு நாள் பணியாற்றி முடியுமோ அது வரை பணியாற்றுவேன் என்றார்.

நான் தற்போது ராஜ்நாத் சிங் ஜி, நிதின் கட்காரி போன்ற தலைவர்களில் கீழ் பணிபுரிந்துள்ளேன் என்றவர், 18 ஆண்டுகளாக வாஜ்பாய் மற்றும் எல்.கே. அத்வானி போன்ற தலைவர்களின் கீழ் வேலை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்றும் கூறினார்.

“2014ம் ஆண்டு , நான் தேர்தலில் போட்டியிட்டபோது, நான் யார் என்று கேட்டார்கள்,ஆனால், தற்போது  அவர்கள் யார் என்று எனக்குத் தெரியும்” என்றறவர், தொடக்கத்தில் சுஷ்மா ஸ்வராஜ், லோக் சபா சபாநாயகர், இந்தூர் எம்.பி. சுமித்ரா மகாஜன் ஆகியோர்கள் அமைச்சர் பதவி வகித்த போதும், அவர்களின் பயணம் கடுமையானதாகத்தான் இருந்தது.  நான் அவர்களை எனக்கு முன்னுதாரணமாக காண்கிறேன் என்றும் தெரிவித்தார்.