பெங்களுரூ:
ரு துளி நீரை கூட தமிழகம் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் காவிரி, வைகை, குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டத்தை நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்திருந்தார். ரூ.14 ஆயிரதது 400 கோடி செலவில் இந்த நதிகள் இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது கடலில் கலக்கும் உபரிநீரை வறட்சியின் பிடியில் சிக்கி உள்ள தென் மாவட்டங்களுக்கு திருப்பி விட இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டம் குறித்து பேசிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, இந்த திட்டத்திற்கு எதிராக மத்திய அரசிடம் மனு தாக்கல் செய்ய உள்ளோம். இதற்காக கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளோம். ஒரு துளி நீரை கூட தமிழகம் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.