அயோத்தி வழக்கில் மத்தியஸ்தர்கள் விசாரணை தொடருமா? உச்ச நீதிமன்றம் இன்று முடிவு

Must read

டில்லி:

யோத்தி விவகாரத்தில், உச்சநீதி மன்றம் அமைத்த 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவினர் நேற்று சீலிட்ட கவரில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மேலும் மத்தியஸ்தர்கள் குழு விசாரணை தொடருமா? அல்லது உச்சநீதி மன்றமே விசாரிக்குமா? என்பது குறித்து உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய முடிவு எடுக்க உள்ளது.

அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக இரு சமூகத்தினரிடையே பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது.  இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், கடந்த 2010ம் ஆண்டு, சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 பாகங்களாக பிரிந்து அவற்றை ராம் லல்லா, நிர்மோகி அக்காரா, சன்னி வக்ஃபு வாரியம் ஆகிய அமைப்புகளுக்கு வழங்க உத்தரவிட்டது.

ஆனால் இதை ஏற்க மறுத்த சில அமைப்புகள்,  தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி இப்ராகிம் கலிஃபுல்லா தலைமையில் ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீரவி சங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய  3 பேர் குழு மத்தியஸ்தர் குழுவை நியமினம் செய்தது. இந்த குழுவினர்  சம்மந்தப்பட்ட அமைப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

இது தொடர்பாக இந்து அமைப்பை சேர்ந்த ஒருவர் வழக்கு தொடர்ந்த நிலையில், இதுவரை மத்தியஸ்தர் குழுவினர் நடத்திய பேச்சு வார்த்தை மற்றும் முடிவுகள்  குறித்த விவரங்களை, சீலிடப்பட்ட உறையில் நேற்று  உச்ச நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம், அந்த அறிக்கையின் அடிப்படையில் அயோத்தி வழக்கை மீண்டும் மத்தியஸ்தர்கள் குழுவினர் மூலம் நடவடிக்கை எடுப்பதா அல்லது உச்சநீதி மன்றமே விசாரிப்பதா என்பது குறித்து  இன்று முடிவெடுத்து அறிவிக்க உள்ளது.

More articles

Latest article