பதவி ஏற்ற பத்தே மாதத்தில் சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, மேகாலயா வுக்கு அதிரடியாக மாற்றப்பட்டு இருக்கிறார்!

இது,நீதித் துறையினர் மத்தியில் மட்டும் அல்ல… மக்கள் மத்தியிலும் கடும் அதிர்வலை யை ஏற்படுத்தி இருக்கிறது!

** சஞ்சீவ் பானர்ஜி அவர்கள் பொதுவாக அதிகார வட்டங்களுக்கு அடிபணியாதவர்… உண்மை மற்றும் சட்ட விதிகளை ஆராய்ந்து தீர்ப்புகளை வழங்கும் இயல்பைக் கொண்டவர்!

** அண்மையில், புதுவையில் பா. ஜ. க.. வினர் ஆதார் டேட்டா க்களை வைத்து வாக்காளர்களில் விவரங்களை அறிந்து கொண்டார்கள் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார் சஞ்சீவ்!

*** அடுத்து, ” ஆலயங்களில் தமிழிலும் அர்ச்சனை செய்யலாம்.. ” என்ற தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை அவர் தள்ளுபடி செய்தார்!

** இன்னும், நீட் தேர்வு பற்றி மக்கள் கருத்தை அறிய தமிழக அரசு அமைத்த முன்னாள் நீதியரசர் ஏ. கே. ராஜன் கமிட்டியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கையும் தள்ளுபடி செய்தார் சஞ்சீவ் பானர்ஜி அவர்கள்!

*** ” இதையெல்லாம் பார்த்துக் கடுப்பான ஒன்றிய அதிகார மேலிடத்தின் கண்ணசைவுக்கு இணங்க, உச்சநீதி மன்ற கொலீஜியம் உடனடியாக நேர்மையாளர் பானர்ஜி அவர்களை மேகாலயா வுக்கு மாற்றப் பரிந்துரை செய்து விட்டது!

ஒன்றிய பா. ஜ. க. அரசுக்கும், தமிழக தி. மு. க அரசுக்கும் சித்தாந்த ரீதியான மோதல்கள் தொடரும் நிலையில், ‘தலையாட்டி பொம்மைகள்’ மட்டுமே இங்கு இனி தலைமை நீதிபதிகளாக நியமிக்கப் படுவார்களா? ” என்று ஐயப்படுகிறார்கள் மக்கள்!

** ஓவியர் இரா. பாரி.