சிட்னி: ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் சுற்றுப் பயண விபரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் டிசம்பர் 3ம் தேதி துவங்குமென அந்நாட்டு மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியின்படி; இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில், அடிலெய்டு மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட்(டிசம்பர் 11) பகலிரவு போட்டியாக நடைபெறலாம்.
முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலும்(டிசம்பர் 3), மூன்றாவது டெஸ்ட் மெல்போர்னிலும்(டிசம்பர் 26), நான்காவது டெஸ்ட் சிட்னியிலும்(ஜனவரி 3, 2021) நடைபெறவுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நடத்துவதற்கு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்(கிரிக்கெட் ஆஸ்திரேலியா) சம்மதம் தெரிவித்துவிட்டதாவும் செய்தியில் கூறப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான அட்டவணையையும் விரைவில் வெளியிடுகிறதாம்!