சென்னை: தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என்ற தகவல் பொய்யானது என மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு டீசல், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 உயர்த்தப்படும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. முக்கிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நிறைவடைந்த பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ. 25 முதல் 28 வரை உயரக்கூடும் என்று, ஒரு தரகு நிறுவனத்தின் குறிப்பை (brokerage note) மேற்கோள் காட்டிப் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதற்குப் பதிலளிக்கும் விதமாகவே மத்திய அரசு இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
ஈரானிய மோதலுக்கு மத்தியில் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்திருப்பதால் ஏற்படும் அழுத்தங்களே, இந்த விலை உயர்வுக்குக் காரணமாக அமையக்கூடும் என்று அந்த ஊடகச் செய்திகள் குறிப்பிட்டிருந்தன. எனினும், இந்தக் கூற்றை மத்திய அமைச்சகம் கடுமையாக மறுத்துள்ளது. சர்வதேச சந்தைகளில் விலை ஏற்ற இறக்கங்கள் நிலவியபோதிலும், கடந்த நான்கு ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயரவே இல்லாத “ஒரே நாடு” இந்தியா மட்டுமே என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகளாவிய விலை அதிர்ச்சிகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக, இந்திய அரசும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் “தொடர் மற்றும் தீவிரமான நடவடிக்கைகளை” மேற்கொண்டுள்ளன. ஐந்து சட்டசபை தேர்தல் நிறைவடைந்த பின், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படும் என்ற செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன என்றும், அத்தகைய எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடையே அச்சத்தையும் பீதியையும் உருவாக்கும் நோக்கத்துடன், செய்திகள் உருவாக்கப்படுகின்றன என்றும், கடந்த நான்கு ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாத ஒரே நாடு இந்தியா மட்டுமே எனவும் கூறப்பட்டுள்ளது. சர்வதேச விலைகளில் கடும் உயர்வில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க, மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களும் இடைவிடாத நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சமூக ஊடகங்களில் பரவும் போலியான தகவல்களால், மக்கள் தவறாக வழி நடத்தப்பட வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமும் நீடிக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]