டெல்லி: ஏப்ரல் 24ந்தேதி நாடு முழுவதும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்.24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. 1992-ஆம் ஆண்டின் 73-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் இயற்றப்பட்டு, 1993-ஆம் ஆண்டு இதே நாளில் நடைமுறைக்கு வந்ததை நினைவுகூரும் வகையில், இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 24 அன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தச் சட்டம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசியலமைப்பு அந்தஸ்தை வழங்கியது. இந்நாள் ஜனநாயகப் பரவலாக்கத்தை முன்னிலைப்படுத்துகிறது, கிராமப்புற சமூகங்களுக்கு வலுவூட்டுகிறது, மேலும் இந்தியாவின் ஜனநாயகப் பயணத்தில் பஞ்சாயத்துகளின் பங்கையும் அங்கீகரிக்கிறது.
1993-ம் ஆண்டு ஏப்ரல் 24-ல் 73-வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் நடைமுறைக்கு வந்ததை நினைவுகூரும் வகையில், இந்த நாள் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரமளித்தலை வலுப்படுத்த கொண்டாடப்படுகிறது.
இன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் தளபத்தில் வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி நாட்டின் மக்கள் பிரதிநிதிகளுக்கு வாழ்த்துகள். பொதுச்சேவையிலும் தேசிய சேவையிலும் உங்கள் அர்ப்பணிப்பு அனைவருக்கும் உத்வேகமளிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]