1snake2
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் கொடிய விஷமுள்ள இரண்டு விரியன் பாம்புகள் ஒரு பெண் பாம்புக்காக போட்ட சண்டையை ஒரு பெண் தைரியமாக படமெடுத்துள்ளார். நேஷனல் ஜியோகிராபிக்கில் வெளிவந்த அந்த வீடியோ இப்போது உலகம் முழுவதுமுள்ள வைல்ட் லைஃப் பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்காவின் ஆர்கன்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர் டான் கெல்லி என்ற பெண்மனி. இவர் சாக்லேட் மற்றும் இனிப்புகள் தயாரித்து விற்பனை செய்பவராவார். இவரது வீட்டின் தோட்டத்தில்தான் இந்த அரிய காட்சி அரங்கேறியுள்ளது. உயிரைப் பணையம் வைத்து இந்தக் காட்சியை தனது மொபைலில் பதிவு செய்த கெல்லி தனது நண்பரான டேவிட் ஸ்டீன் என்ற வனவியல் அறிஞருக்கு இந்தக் காணொளியை அனுப்பி வைத்துள்ளார். டேவிட் பாம்புகளை அடையாளம் கண்டுபிடிப்பதில் வல்லவராவார்.
பாம்புகள் கலவி காலங்களில் ஒரு பெண்பாம்புக்காக சண்டையிடுவது வழக்கம். அப்படி சண்டையில் வெல்லும் ஆண் பாம்புகள் பெண் பாம்புடன் இணைசேரும். தோற்ற பாம்புகள் தன் உடலில் உள்ள காயங்கள் ஆறும் வரை காத்திருந்து அடுத்த பலப்பரீட்சைக்கு தயாராகும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரே வகைப் பாம்புகள்தான் இதுபோன்ற சண்டையில் ஈடுபடும். இச்சண்டைக்கு காரணமான பெண் பாம்பும் அதே வகையைச் சார்ந்ததாகத்தான் இருக்கும்.
ஆனால் கெல்லி எடுத்த வீடியோவில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் சண்டையிடும் இரு பாம்புகளுமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வெவ்வேறு வகைப் பாம்புகளாகும். இது மிகவும் அரிதானது. இது போன்று ஏற்படும் கலவிகளில் சில கலப்பு வகை குட்டிகள் தோன்றக்கூடும்.
இதுபோல ஆண் பாம்புகள் கலவிக்காக செய்யும் யுத்தங்கள் நம் பார்வையில் அவை நடனம் புரிவதாக தோன்றக்கூடும். இவ்வாறு இந்த காணொளியை ஆராய்ந்து பார்த்த டேவிட் ஸ்டிடீன் கூறினார்.
Courtesy:http://news.nationalgeographic.com/
Video Link: http://news.nationalgeographic.com/2016/09/venomous-vipers-locked-in-mating-duel-different-species-combat/