கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளில் ஐந்து பேரில் ஒருவர் மனநோயாளி என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
ஆஸ்திரேலியாவின் பாண்ட் பல்கலையில் பணிபுரியும் உளவியலாளர் நாதன் புரூக்ஸ். இவர் மனநோய்கள் பற்றி ஆய்வு செய்வது வழக்கம்.
1sycopath
இவர் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்யும் அதிகாரிகள் பற்றிய ஓர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் 261 கார்பரேட் நிறுவன அதிகாரிகளில் 26% பேர் மனநோயாளிகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி புரூக்ஸ் கருத்து கூறும்போது “இவர்களிடம் உள்ள பொதுவான குணம் அடுத்தவர் சிரமங்களை புரிந்து கொள்ளாமை, எதையும் ஆழமாக பார்க்காமல் மேலோட்டமாக பார்ப்பது, நேர்மையற்ற தன்மை ஆகியவையாகும்.
இவர்கள் எதிலும் வெற்றிக்காக குறுக்கு வழிகளைக் கடைப்பிடிக்க தயங்காதவர்கள். அதன் விளைவாக இவர்கள் வாழ்வில் எளிதாக வெற்றிகளை அடைவதால் இவர்களை வெற்றிகரமான மனநோயாளிகள் என்றும் அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இவர்கள் பெறும் மேலோட்டமான வெற்றிகளால் ஈர்க்கப்படும் பெரு நிறுவனங்கள் இவர்களுக்கு எளிதாக வேலை கொடுத்து விடுகின்றன.
இனி உயர் பதவிகளுக்கான நேர்முகத்தேர்வுகளில் வெற்றிகளை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அவர்களது ஆளுமையையும், குணாதிசயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஐந்தில் ஒருவர் மனநோயாளி என்ற புள்ளி விபரம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமல்ல சிறையில் உள்ள கைதிகளுக்கும் பொருந்தும் என்பது கூடுதல் தகவல்.