உயரத்திலிருந்து கீழே விழுந்தாலும் வேலை செய்யும் ஆப்பிள் ஐஃபோன் 7!

Must read

வ்வொரு முறை பிரபல மாடல் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் வெளிவரும்போதும் அதை பலரும் பரிசோதித்து தங்கள் விமர்சனங்களை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கம். இதுபோன்ற வீடியோக்களுக்கு ஸ்மார்ட்போன் ரசிகர்களிடத்தில் மிகுந்த வரவேற்பு உண்டு.
ஐஃபோன் 7 புதிதாக வெளிவந்துள்ள நிலையில் அது மேலே பறக்கும் ஹெலிகாப்டரில் இருந்து கீழே விழுந்தால் தாங்குமா என்ற பரிசோதனையை ஒருவர் செய்கிறார்.
ஆச்சரியபடும்விதமாக அது வேலை செய்கிறது. கீழே உள்ள காணொளியைப் பாருங்கள்:
[KGVID]https://patrikai.com/wp-content/uploads/2016/09/IPHONE-7-DROPPED-FROM-A-HELICOPTER.mp4[/KGVID]
ஐஃபோன் 7 vs சாம்சங் கேலக்ஸி நோட் 7 இரண்டில் தண்ணீரில் எது தாக்குப்பிடிக்கும்?
மற்றொரு பரிசோதனை ஐஃபோன் 7 vs சாம்சங் கேலக்ஸி நோட் 7 இரண்டில் தண்ணீரில் எது தாக்குப்பிடிக்கும் என்று கண்டறிய நடத்தப்படுகிறது. இரண்டு மொபைல்களும் தன்ணீருக்குள் 5 அடி, 10 அடி, 15 அடி, மற்றும் 20 அடிகளில் ஒவ்வொரு முறையும் 5 நிமிடங்கள் வைக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. அவ்வளவு ஆழத்துக்கு சென்ற பின்னும் இரு மொபைல்களும் அற்புதமாக வேலை செய்கின்றன.
<https://www.youtube.com/watch?time_continue=761&v=K05cTPeFfyM>
அதன் பின்னர் 30 அடி ஆழத்தில் 5 நிமிடங்கள் வைக்கப்பட்டு பரிசோதிக்கும் போது சாம்சங் கேலக்ஸி நோட் 7 ரீபூட் ஆகிறது. ஆனாலும் வேலை செய்கிறது. ஐஃபோன் 7 எந்த தடையுமின்றி அற்புதமாக இயங்குகிறது.
அடுத்ததாக 35 அடி ஆழத்தில் 5 நிமிடங்கள் வைக்கப்பட்டு பரிசோதிக்கும் போது சாம்சங் கேலக்ஸி நோட் 7 சுத்தமாக வேலை செய்யவில்லை. ஆனால் ஐஃபோன் 7 அதற்குப்பின்னும் மிக நன்றாக வேலை செய்கிறது.
Courtesy: www.9to5mac.com

More articles

Latest article