தனது பயனர்கள் 50 மில்லியன் பேரின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம் திருடிய விவகாரத்தில் அதன் உரிமையாளர் மார்க் ஜூக்கர்பெர்க் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவில் எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் சிலர் மார்க் ஜூக்கர்பெர்க் மீது வழக்கு தொடுத்து இருக்கிறார்கள். முதற்கட்டமாக இதில் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பி இருக்கிறார்கள்.  இவ்வளவு நாள் அமெரிக்க தேர்தலில் முறைகேடு நடக்கவில்லை என்று பொய் சொல்லியது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அமெரிக்காவில் மட்டுமில்லாமல் பிரிட்டனிலும் இந்த பிரச்சனை எதிரொலித்துள்ளது.  பிரிட்டன் தகவல் தொடர்பு ஆணையர் எலிசபெத் டென்ஹாம், பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக  வாரண்ட் பெற்றுள்ளார். அதன்படி இன்றும் நாளையும் பேஸ்புக் தலைமையகம், அந்நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட இருக்கிறது. கைது செய்யப்படலாம் இந்த சோதனையின் முடிவில் பேஸ்புக் நிறுவனர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

அதிகபட்சம் இந்த வார இறுதிக்குள் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.