லக்னோ,

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு பிப்ரவரி மாதம் 4–ந் தேதி தொடங்கி, கடந்த 8–ந் தேதி வரை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. 5 மாநிலங்களிலும் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

உத்தர பிரதேசத்தை பொறுத்தவரை அண்மையில் கிடைத்த தகவலின் படி பாஜக 156 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸ் கூட்டணி 50 இடங்களிலும், பகுஜன் சமாஜ்வாடி கட்சி 23 தொகுதிகளிலும்  ஆர்.எல்.டி 2 தொகுதிகளிலும் பிற கட்சிகள் 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இதேபோக்கு மாலைவரை நீடித்தால் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரவாய்ப்புள்ளது.