த்தரப்பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

60 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 4ம் தேதி இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதன்படி, மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 28 இடங்களையும், காங்கிரஸ் 20 இடங்களையும், மற்ற கட்சிகள் 12 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

மணிப்பூரின் தொவ்பல் தொவ்பல் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட அம்மாநில முதல்வர் இக்ரோம் இபோபி சிங் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் இவரை எதிர்த்து போட்டியிட்ட மக்கள் எழுச்சி நீதிக்கூட்டணி கட்சியில் போட்டியிட்ட இரோம் ஷர்மிளா தோல்வியடைந்தார்.