பனாஜி:

கோவா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அங்கு ஆளும் பாஜக கட்சியின் முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர் தோல்வியைத் தழுவியுள்ளார்.

கோவாவில் 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக கடந்த 4ம் தேதி  நடந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ்  மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் போட்டியிடுகின்றன. மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, சிவசேனா, கோவா சுரக்சா மன்ச் ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆம் ஆத்மி கூட்டணி அமைத்துள்ளது.

அங்கு பெரும்பான்மை பெற, 21 தொகுதிகளை பெற வேண்டும்.
இந்நிலையில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையின் சமீபத்திய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 4 இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.

கோவாவில் ஆளும் பாஜக கட்சியின் முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர் தோல்வி அடைந்துள்ளார்.  இது அம்மாநிலத்தில் பாஜகவுக்கு பெரும் பின்னடை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு  தென்படுகிறது..