திருமலை:

திருப்பதி மலைப்பகுதியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வாழும் வன விலங்குகள் ஜாலியாக சாலைகளில் சுற்றித் திரியும் அரிய காட்சிகள் காணப்படுகிறது.  இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

திருப்பதி ஏழுமலையானைக் காண தினசரி லட்சக்கணக்கானோர் திருமலைக்கு வருவது உண்டு. ஏராளமான வாகனங்கள் ஒரு பகுதியாக வரும் நிலையில், ஏராளமான பக்தர்களும் மலைப்பாதைகள் வழியாக நடந்தும் வருவது வாடிக்கை..

இதன் காரணமாக அந்த வனப்பகுதியில் வாழ்ந்து வரும் வனவிலங்குகள், மக்களின் தாக்குதலுக்கு அஞ்சி காட்டுக்குள்ளேயே அடைபட்டு கிடந்தன.

தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வழிப்பாட்டுத் தலங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால், அங்குள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதைக்கண்ட வனவிலங்குகள் தங்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ள மகிழ்ச்சியில்  சாலையில் துள்ளித்திரியும் காட்சிகள் பார்ப்போரை பரவசப்படுத்துகின்றன…

அந்த வீடியோவை நீங்களும்தான் பாருங்களேன்…