சென்னை:

ஆதார் தகவல்களை அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சிஐஏ இணைய உளவு பார்ப்பதாக விக்கி லீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ‘கிராஸ் மேட்ச் டெ க்னாலஜிஸ்’ இதற்கென்று பிரத்யேக இணைய டூல்ஸை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை இந்திய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

கிராஸ் மேட்ச் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆதார் திட்டத்தை செயல்படுத்தும் யுஐடிஏஐ.க்கு பையோ மெட்ரீக் மென்பொருளை வழங்கி வருகிறது. இதனால் ஆதார் தகவல்கள் கசிய வாய்ப்பு உள்ளது என்று தெரிவி க்கப்பட்டுள்ளது.

கிராஸ் மேட்ச் நிறுவனத்தின் இந்திய கூட்டாளியான ஸ்மார்ட் ஐடண்டி டிவைசஸ் நிறுவனம் 1.2 மில்லியன் இந்திய குடிமக்களின் ஆதார் தகவல்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து விக்கிலீ க்கீஸ் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு தகவல் வெளியிட்டிருந்தது.

அதில், ‘‘சிஐஏ உளவாளிகள் ஏற்கனனே ஆதார் தகவல்களை திருடிவிட்டனரா?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தது. சில நிமிடங்களில் ஆதார் தகவல்களை சிஐஏ ஏற்கனவே திருடிவிட்டது என்ற தலைப்பில் ஜியோ பொலிடிக்கல் இதழுடன் இணைந்து ஆன்லைன் கட்டுரை வெளியிட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘ இது வீக்கிலீக்கின் லீக் கிடையாது. இது ஒரு இணைதளத்தில் வெளியான அறிக்கை. கிராஸ் மேட்ச் நிறுவனம் உலகம் முழுவதும் பயோமெட்ரிக் தகவல் சேகரிப்பு கருவியை வழங்குபவர்கள். சேகரிக்கப்படும் தகவல்கள் அந்த நிறுவனத்தையோ அல்லது தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்கோ சென்றடையாது.

தகவல்கள் அனைத்து ஆதார் சர்வர்களில் மட்டுமே பதிவாகும். இந்த அறிக்கையில் எவ்வித அடிப்படை உண்மையும் இல்லை. ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளது. இதர அமைப்புகள் அதை இயக்க முடியாது’’ என்றனர்.

‘‘சிஐஏ வசம் பயோமெட்ரிக் தகவல்களை சேகரிக்கும் அமைப்பு உள்ளது. உலகளவில் இந்த அமைப்பு தான் முன்னோடியாக உள்ளது. இதன் நோக்கமே சேகரிக்கப்பட்ட பயோ மெட்ரிக் தகவல்களை பரிமாற்றம் செய்வது தான்’’ என்று வீக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.