மனம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்காதீர்கள்

Must read

இறந்த மனைவியின் உடலை தோளில் சுமந்து செல்லும் கணவர்
ஒடிசா மாநிலம் கலஹன்டி பகுதியை சேர்ந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் தனா மஜி. இவரது மனைவி அமன்கடி.  காச நோயால் பாதிக்கப்பட்ட அமன்கடி, மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  சிகிச்சை பலனின்றி புதன்கிழமை, அமன்கடி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
60 கி.மீ தொலைவிலுள்ள அவரது வீட்டுக்கு உடலை கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகம் வாகன வசதி  செய்து தரவில்லை. மிக வறிய நிலையில் இருக்கும்  தனா மஜிக்கு, வேறு வாகனத்தை வாடகைக்கு அமர்த்த முடியவில்லை.  இதையடுத்து, மனைவி சடலத்தை தோளில் சுமந்து, ஊருக்கு நடக்க ஆரம்பித்தார்.   அப்போது அவரது மகளும் உடன் நடந்துவந்தார்.
சுமார் 10 கி.மீ தூரம் நடந்து சென்ற பிறகு, சில இளைஞர்களை இந்த துயரைப் பார்த்து பரிதாபப்பட்டு, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு ஆம்புலன்ஸ் வந்து உடலை ஏற்றிச் சென்றது.
இந்த போட்டோ மற்றும் வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன.
இதே போல ஒரு சம்பவம் கடந்த மே மாதம் இதே ஒடிசா மாநிலத்தில் நடந்தது. உடலை எடுத்துச் செல்ல முடியாத வாகனத்திற்கு பணமில்லாததால் ஏழைகள் சிலர் உறவுக்காரர் சடலத்தை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு தூக்கி சென்ற சம்பவம் நடந்தது.
Untitled
 
வீடியோ இணைப்பு:
https://www.facebook.com/TheNewFekuExpress/videos/vb.1662654570650537/1727200150862645/?type=2&theater
 

More articles

Latest article