தேவகோட்டை

டிகர் வடிவேலு அமைச்சர்களின் நகைச்சுவையைப் பார்த்து நடிப்பதை நிறுத்தி விட்டதாக அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக மூன்றாக உடைந்தது.   இதில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் கோஷ்டியினர் இணைந்து அதிமுக சின்னத்தைத் திரும்பப் பெற்றனர்.  இதனால் தனித்து விடப்பட்ட டிடிவி தினகரன் அமமுக என்னும் கட்சியை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.  அவர் சிவகங்கை மாவட்டை தேவகோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அந்த சந்திப்பில் தினகரன், “அனைவரது எதிர்பார்ப்பும்  உள்ளாட்சித் தேர்தல் நட க்க வேண்டும் என்பது ஆகும்.   அதே வேளையில்  உள்ளாட்சி அமைப்புகளில் மறுவரையறை முறையாக இல்லாததால் எதிர்க்கட்சிகள் நீதிமன்றம் சென்றுள்ளன. அதே வேளையில், தேர்தலை நிறுத்தும் எண்ணம் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை. இதைச் சொன்னதால் நான் திமுகவை ஆதரித்துப் பேசுவதாக நினைக்க வேண்டாம்.

ஆட்சியாளர்களின் நோக்கம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் காலம் தாழ்த்துவது ஆகும்.  இந்த தினகரனுக்கு பயந் து, விலைபோன ஒருவரை (புகழேந்தி) வைத்து அவர்கள் பேட்டி கொடுக்க வைத்துள்ளனர். அந்த மனிதர் அமமுகவைப் பதிவு செய்யத் தடை கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளார்.  நீதிமன்றம் அவருக்கு குட்டு தான் வைக்கும்.

ஒரு விபத்தில் பதவிக்கு  வந்தவர்கள் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டு, வெற்றிடத்தை நிரப்பி விட்டோம் எனக் கூறிக் கொள்கின்றனர்   நமது அமைச்சர்களின் இந்தக் நகைச்சுவையைப் பார்த்து நகைச்சுவை நடிகர் வடிவேலு, தான் நடிப்பதையே விட்டுவிட்டார்.  இந்த அமைச்சர்களின் நகைச்சுவையை பற்றிக் கூறினால் என் மீது வழக்குத் தொடுக்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.