’99 சாங்ஸ்’ பாடல் வெளியீட்டு விழாவில் தொகுப்பாளினி ஹிந்தியில் பேசியதால் ஏ.ஆர். ரஹ்மான் மேடையை விட்டு இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தான் ஏன் மேடையில் ஹிந்தியில் பேசினேன் என்பதை பற்றி விளக்கமளித்துள்ளார் தொகுப்பாளினி.

இதுகுறித்து விளக்கமளித்த அவர், அந்த நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தபோது, நடிகர் இஹான் தமிழ் தெரியாததால் அமைதியாக இருந்தார். இதனால் அவரை சில வார்த்தைகள் பேச வைப்பதற்காகவே, நான் ஒரு சில வார்த்தைகள் ஹிந்தியில் பேசினேன் என்று கூறினார்.

மேலும் நான் இஹானுக்கு ஒருசில தமிழ் வார்த்தைகள் எல்லாம் கற்று கொடுக்கலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் ரஹ்மான் சார் மேடையை விட்டு கீழே இறங்கவும் எனக்கு கை, கால்கள் ஓடவில்லை. ஒருசில நிமிடங்களுக்கு நான் அப்படியே ஃப்ரீஸ் ஆகிவிட்டேன் என்று கூறியுள்ளார்.