துரை

நூறு நாள் வேலைத் திட்டத்தில் இயந்திரங்கள் செய்ய வேண்டிய வேலையை மனிதர்களுக்கு அளிப்பது ஏன் என மதுரை உயர்நீதிமன்ற கிளை கேட்டுள்ளது.

மகாத்மா காந்தி 100 நாள் கிராமப்புற வேலைத் திட்டத்தின் மூலம் பலரும் பயன்பெற்று வருகின்றனர்.  இவர்களைக் கொண்டு உள்ளூரில் பல மராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

கிராம மக்கள் பலருக்கு இது வாழ்வாதாரத்தை அளித்து வருகிறது.

அதே வேளையில் இந்த திட்டத்தில் பணி செய்யாதவர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு ஊதியம் வழங்கப்பட்டதாகவும் அதற்கு அதிகாரிகள் உடந்தையாக உள்ளதாகவும் ஒரு மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதியப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின் போது நீதிபதிகள் நிதி மோசடியில் அதிகாரிகள் ஈடுபடுவதால் பணியாளர்கள் வேலை செய்யாமல் மோசடி செய்வதாகக் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் இயந்திரங்கள் விரைவில் செய்யும் வேலையை மனிதர்கள் மூலம் அதிக காலத்தில் செய்வது ஏன் என நீதிபதி தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை நவம்பர் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.