ரமோன் மக்சேசே விருது . இது ஆசியாவின் நோபல் பரிசு என கருதப்படுகின்றது.

பிலிப்பைன்ஸ் அரசின் உடன்பாட்டுடன் அந்நாட்டு அதிபர் மறைந்த ரமோன் மக்சேசே அவர்களின் நினைவாகவும், அவரது அரசியல் நேர்மை, மக்கள் சேவை இவற்றைக் பறைசாற்றும் விதமாக  வளரும் நாடுகளில் உள்ளவர்களுக்காக  இப்பரிசு ஏற்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ரமோன் மக்சேசே விருது நிறுவனம் ஆசியாவில் தங்கள் துறையில் சிறந்து விளங்கும் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பரிசு வழங்கி வருகிறது. ஆறு வகைகளில் இப்பரிசு வழங்கப்படுகிறது: அரசுப்பணி, பொது சேவை, சமூக தலைமை, தாளியல், இலக்கியம் மற்றும் மக்கள் தொடர்புக் கலை, அமைதி மற்றும் பன்னாட்டு புரிதல், வளரும் தலைமை.
முதல் ரமோன் மக்சேசே  விருதைப் பெற்ற இந்தியரான வினோபா பாவே (1958ம் ஆண்டு),வைத்தொடர்ந்து, அன்னை தெரசா (1962), எம்.எஸ். சுவாமிநாதன் (1971), எம்.எஸ்.சுப்புலட்சுமி (1974), கிரண்பேடி (1991), டி.என்.சேசன் (1996), அரவிந்த் கெஜ்ரிவால் (2006) உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.
modi 2
2016-ம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருதுகள் கடந்தவாரம் அறிவிக்கப்பட்டன. இதில் இரண்டு இந்தியர்கள் உட்பட 3 நபர்கள், 3 அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மனிதக்கழிவை மனிதனே அள்ளுவதை எதிர்த்துப் போராடிவரும் கர்நாடகத்தை சேர்ந்த பெஜவாடா வில்சனுக்கும், கலைக்குள் சமூக நலத்தை உட்புகுத்தி வருவதாகக் கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு ராமன் மகசசே விருது வழங்கப்பட்டுள்ளது.
krishna 4
டிவிட்டர் மற்றும் மன் கி பாத்தில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் அனைவருக்கும் உடனடியாய் வாழ்த்து தெரிவிப்பராய் காட்டிக் கொள்ளும் நரேந்திர மோடி, முக்கியமான அரசியல் பிரச்சனைகள்குறித்து கள்ளமவுனம் காப்பது போலவே இந்த ஒருவருக்கும் வாழ்த்து சொல்லாமல் கள்ளமவுனம் காத்து வருகின்றார்.
krishna 2
கர்நாடகாவைச் சேர்ந்த பெஜவாடா வில்சன், மனிதக் கழிவை மனிதர்களே அள்ளும் முறைக்கு எதிராக 30 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வருகிறார்.‌ இதற்காக, சஃபாய் கர்மசாரி அந்தோலன் என்ற மனித உரிமை அமைப்பை உருவாக்கியுள்ள வில்சன், தலித் மக்களின் மேம்பாட்டிற்காகப் போராட்டங்களை நடத்தி வருகிறார்.
யாரிந்த வில்சன்:
கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் பிறந்தவரான பெஜவாடா வில்சனின் தந்தையும் சகோதரரும் உறவினர்கள் பலரும் துப்புரவுத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்தவர்கள். இளமைக்காலத்தில் விடுதியில் தங்கிப்படித்தபோது, பெஜவாடா வில்சனின் சாதியைக் குறிப்பிட்டு மனிதக்கழிவை அகற்றுபவர் எனச் சக மாணவர்கள் கேலி செய்துள்ளனர். வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பெஸ்வாடா வில்சனிடம் கேட்காமலேயே, அவரது விருப்பமான வேலை துப்புரவுத்தொழில் என அதிகாரிகள் எழுதியதாகவும் கூறப்படுகிறது. சாதி அடிப்படையில், தான் அடிமைப்படுத்தப்படுவதைக் கண்ட வில்சன், மனிதக் கழிவை மனிதனே அள்ளும் சமூக அவலத்தை இந்தியாவிலிருந்து அகற்ற 1986ஆம் ஆண்டு முதல் போராடி வருகிறார். அவரது இந்தச் சமூகநலப் பணிக்காகத் தற்போது, ரமோன் மகசசே விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
tm krishna
டி.எம். கிருஷ்ணா யார்?
டி.எம். கிருஷ்ணா கர்நாடக இசைப்பாடல்கள் அனைத்து தரப்பினருக்கும் சென்றடையும் வகையில் செயல்பட்டு வருகிறார்.  அதாவது கர்நாடக சங்கீதம் மேல்சாதியனருக்கு மட்டும் சொந்தமானதல்ல, அனைத்து தரப்பு மக்களும் கற்கலாம் எனும் கருத்தை செயலாக்கி வருபவர்.
பிரதமரின் இரட்டைநிலை
அம்பேத்கரை வைத்து அரசியல் நாடகம் நடத்தி வரும் பாஜக மற்றும் நரேந்திர மோடி தலித் ஒருவர் பெற்றுள்ள மிகப்பெரும் விருது குறித்து வாய் திறக்கவில்லை என்பது அவரது தலித் ஓட்டுவங்கி அரசியலைக் காட்டுகின்றது.
நரேந்திர மோடியை இந்தியாவின் நோபல் பரிசான மகசசே விருது பெற்ற இருவரையும் வாழ்த்து சொல்லவிடாமல் தடுக்கும் பின்னனி என்ன என ஆராய்ந்தோம்.
அதன் விவரம் :
சென்ற ஆண்டு சஞ்சிவ் சதுர்வேதி இந்த விருதினைப் பெற்றபொதும் நரேந்திர மோடி வாழ்த்து கூறவில்லை.
ஆக இந்த மூவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது.
இம்மூவரும் நரேந்திர மோடியை அரசியல் ரீதியாக விமர்சித்துள்ளனர்.
இதுவே மோடியை வாழ்த்து சொல்லவிடாமல் கட்டிப்போட்டுள்ளது.
பாஜக ஆட்சியின் கீழ் தலித்துகள் அடைந்து வரும் துன்பங்கள்குறித்து விமர்சித்துள்ளார்.
மோடியின் சுவச் பாரத் திட்டத்தை விமர்சித்து, “இன்னும் மலத்தை சுத்தம் படுத்த தலித்துகள் தான் தேவைபடுகின்றனர். எனவும் விமர்சித்திருந்தார்.
ஹஃப்ஃபிங்கம் போஸ்ட் -டிடம் “இதுவரை பிரதமர் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை” என வில்சன் தெரிவித்தார்.
மோடியை விமர்சித்ததுடன், மத்திய அரசு அவரை”பத்ம விருதுகளுக்காக விண்ணப்பிக்குமாறு கோரியதை நிராகரித்துவிட்டார்.
“இந்திய ரயில்வேயில் “மனிதர்கள் மலம் அள்ளுவதை தடை செய்யும் வரை இந்திய அரசிடமிருந்து எந்த விருதையும் பெறபோவதில்லை என்பதில் திட்டவட்டமாக உள்ளார்.
பல வருடங்களுக்கு முன்னர் மொடி, மலம் அள்ளுவது ஒரு தெய்வத் திருப்பணி என்று நியாயம் கற்பித்திருந்தார். சமீபத்தில் ரேடியோவில் பேசும்போது “மலம் அள்ளுவது தடை செய்யப்பட வேண்டும்'” என்று பேசி இருந்தார். அவர் பேசியியது உண்மையெனில், அவர் நிச்சயம் வில்சனை வாழ்த்தி இருந்திருப்பார்.
கிருஷ்ணா, மோடி அரசில் இந்தியாவில் அதிகரித்து வரும் “சகிப்புத்தனமை யின்மை குறித்து மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், “மாட்டிட்றைச்சி வைத்திருந்ததாகப் பொய்க் குற்றம்சாட்டப்பட்டு அடித்துக் கொல்லப்பட்ட முகமது அக்லாக் குறித்து பிரதமர் மவுனம் காப்பது மிகவும் வருத்தமாகவுள்ளது எனக் குறிப்பிட்டு இருந்தார். கொல்லப்பட்டவருக்காகப் பிரதமர் குரல் கொடுக்க வேண்டும் என இந்தியாவெங்கும் மக்கள் ஏன் கத்தி கோரிக்கை வைக்க வேண்டும். பிரதமர் வாய் திறக்கமாட்டாரா?” எனத் திறந்த மடலில் வினவி இருந்தார்.
ஜனநாயக நாட்டில் ஒரு பிரதமர் தனது கொள்கைகளுக்காக மற்ற கொள்கை உடையவர்களைத் தீண்டத் தகாதவர் போல் நடத்துவது வருத்தத்திற்குறியது. குறைந்த பட்சம் வில்சனின் 30 ஆண்டுகால தலித் மக்களுக்கான சேவைக்காகப் பாராட்டி இருக்கலாம்” என்றார் டி.எம்.கிருஷ்ணா.
modi silent 2