சென்னை:  சிறந்த பொருளாதார மேதைகளைக்கொண்டு தமிழக பொருளதாரத்தை உயர்த்தப்போவதாக கூறிய திமுக அரசு, வரியை உயர்த்தி தான் தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமின் காரணமாக  இராயபுரம் காவல் நிலையத் திற்கு கையெழுத்திட வந்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழ்நாட்டில் சொத்துவரி பல மடங்கு உயர்த்தி உள்ளது கண்டிக்கத்தக்கது, அதை வாபஸ் பெற வேண்டும். தமிழக பொருளாதாரத்தை மீட்பதாக சிறந்த பொருளாதார மேதைகளை முதல்வர் நியமித்தார். பொருளாதார மேதைகளை நியமித்து 300 நாட்கள் ஆகிறது. ஆனால், இப்போது வரி உயர்த்தப்பட்டு உள்ளது. இதுபோல  வரியை உயர்த்தி மக்களுக்கு சுமையை ஏற்படுத்திதான் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றால், அந்த பொருளாதார மேதைகள் எதற்கு,  அரசு எதற்கு எனக் கேள்வி எழுப்பினார்.

திமுக அரசு பொருளாதார நடவடிக்கையை மீட்க எந்தவித நடவடிக்கையும் தற்போது வரை மேற்கொள்ளவில்லை விமர்சித்த ஜெயகுமார், வரியை யும் உயர்த்தாமல் பொருளாதாரத்தையும் மேம்படுத்தியது அதிமுக அரசுதான்.

தமிழ்நாட்டில், மக்கள் விரோத ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது, குற்றங்கள் அதிகரித்து வருகின்றன,   திமுக ஆட்சியின் ஊழல்கள் தொடர்பான விபரங்களை மத்திய அரசுக்கு அனுப்பும் பணி விரைவில் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்பிஐ முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன் தலைமையில் பொருளாதார ஆலோசனை குழு! கவர்னர் உரையில் தகவல்…

தமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் : முழு விவரம்