புதுடெல்லி:

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்கும் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பளித்ததும், ரிஷாப்பிற்கு வாய்ப்பளிக்காததற்கும் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே. பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.


இந்திய கிரிக்கெட்டின் தேசிய மூத்த தேர்வுக் குழு, இங்கிலாந்தில் மே30&ம் தேதி நடைபெறும் 2019 உலகக் கோப்பையில் பங்கேற்கும் 15 வீரர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.

இதில், தினேஷ் கார்த்திக் இடம் பெற்றுள்ளார். ஆனால், ரிஷாப் பன்ட் பெயர் இடம்பெறவில்லை.

இது குறித்து தேர்வுக்கு தலைவர் எம்எஸ்கே. பிரசாத் கூறும்போது, அனுபவம் மற்றும் இக்கட்டான நிலையை சமாளிப்பது போன்றவற்றின் அடிப்படையில் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார்.

தினேஷ் கார்த்திக் 91 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். பன்ட் 5 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். மற்றபடி பன்ட் திறமைசாலிதான். அவருக்கான நேரம் நிறைய இருக்கிறது. அவர் இடம் பெறாதது துரதிஷ்டவசமே என்றார்.