ஏடிஎம்கள் வெள்ளிக்கிழமை முதல் இயங்கும் என்று அரசு அறிவித்தும் இன்னும் பல ஏடிஎம்கள் “அவுட் ஆஃப் சர்வீஸ்” என்ற நிலையிலேயே இருக்கின்றன. அல்லது பணம் தீர்ந்துவிட்டது என்ற அறிவிப்பு வந்து வெகுநேரம் வரிசையில் காத்திருந்த மக்களை வெறுப்பேற்றுகின்றன.

atm_machine

நவம்பர் 8-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் ஏடிஎம்கள் இயங்க தொடங்கியவுடனே நவம்பர் 18 வரை அதிகபட்சம் ஒரு கார்டுக்கு ரூ.2000 விகிதம் எடுத்துக்கொள்ளலாம் 19-ஆம் தேதியிலிருந்து ஒரு கார்டுக்கு ரூ.4000 வரை எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் சகஜ நிலை திரும்பக் வில்லை.
பிரச்சனை என்னவென்று விசாரித்தபோது, வங்கிக இரு முக்கிய பிரச்சனைகளை முன்வைக்கின்றன. ஒன்று போதுமான பணம் இல்லை, இன்னொன்று பணத்தை ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்புவதில் உள்ள தொழில்நுட்பச் சிக்கல். இந்திய கரன்சியின் 80% நோட்டுக்களை 500 மற்றும் 1000 ரூபாய்களாக அச்சடிக்கப்பட்டிந்தபடியால் அத்தனை நோட்டுக்களையும் திடீரென்று செல்லாததாக அறிவித்ததால் வங்கிகளிடம் போதுமான 100 ரூபாய் நோட்டுக்கள் கையிருப்பு இல்லை.
இன்னொன்று ஒவ்வொரு ஏடிஎம் இயந்திரங்களின் உள்ளேயும் 3 அல்லது 4 பேழைகள் வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பேழையினுள்ளும் 1000, 500 மற்றும் 100 ருபாய் நோட்டுக்களை வைக்கும்படி அவை கட்டமைக்கப் பட்டிருக்கும். அரசு 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை தடை செய்துவிட்டபடியால் அந்த 1000 மற்றும் 500-க்கான பேழைகளை புதிய நோட்டுக்களுக்காக மறுகட்டமைக்க வேண்டும். அவற்றை செய்து முடிக்க கால அவகாசம் தேவைப்படும். பல ஏடிஎம்கள் திறக்கப்படாமல் இருக்க இதுவும் ஒரு காரணம்.
இந்த சிக்கல்கள் சீர்செய்யப்பட ஒன்றிரெண்டு வாரங்கள் ஆகலாம். அதுவரை பொறுமைகாக்க வேண்டியதுதான். வங்கிகள் டிசம்பர் இறுதிவரை ஏடிஎம்மில் பணம் எடுக்கும் கட்டணத்தை ரத்து செய்திருக்கிறபடியால் அவரவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்களிலேயே பணம் எடுப்பது நல்லது.