டில்லி

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பிரதமர் மோடியை அவரது அலுவலகத்துக்குச் சென்று கலவரம் தொடர்பாக சந்தித்துப் பேசினார்.

டில்லியில் சென்ற மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று அக்கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாம் முறையாக முதல்வராகப் பதவி ஏற்றார்.   இந்த பதவி ஏற்பு விழாவுக்குப் பிரதமர் மோடிக்கு அழைப்பு அனுப்பிய போதிலும் அவர் உபியில் வேறொரு நிகழ்ச்சிக்குச் சென்று விட்டார்  அதன்பிறகும்  கெஜ்ரிவால் – மோடி சந்திப்பு நடக்கவில்லை.

கடந்த வாரம் டில்லியின் வடகிழக்கு பகுதியில் நடந்த குடியுரிமை சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது.  இதில் 46 பேர் உயிரிழந்தனர். சுமார் 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   கலவரத்தில் 4 மசூதிகல், ஏராளமான வீடுகள், பொதுச் சொத்துகள் தனியார் சொத்துக்கள் எனப் பல எரித்து சாம்பலாக்கப்பட்டன.

தற்போது நகரில் மெதுவாக இயல்பு நிலை திரும்புகிறது.  இன்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடியின் அலௌவலகத்ஹ்டுக்கு சென்று அவரை சந்தித்து சுஆர் 30 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். இந்த சந்திப்பின் போது டில்லியில் நடந்த வன்முறை கலவரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

இந்த சந்திப்புக்கு பின் கெஜ்ரிவால் நிருபர்களிடம், ”டில்லி காவல்துறையினர் கடந்த சில தினங்களாகத் தீவிரமான ரோந்துப்பணி, கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் கலவரம் ஒடுக்கப்பட்டு உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது.   அத்துடன் கலவரத்தைத் தூண்டும் வதந்திகள் பரவுவதையும் காவல்துறை தடுத்துள்ளனர்.   சென்ற வாரமே இவ்வாறு செய்திருந்தால் இத்தனை உயிரிழப்பு நடந்திருக்காது.

இனி இது போல் வன்முறை நிகழக்கூடாது.  கலவரத்தில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் பிரதமரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.  கலவரத்தில் ஈடுபட்டோர் யாராக இருந்தாலும் எத்தகைய அரசியல் செல்வாக்கு உடையவராயினும் நடவடிக்கை எடுக்க அவரிடம் வலியுறுத்தி உள்ளேன்.” எனத் தெரித்துள்ளார்.