சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 34 பேர் கொண்ட தமிழக புதிய அமைச்சரவை பதவி ஏற்றுள்ள நிலையில்,  திமுக கொறடா பதவி யாருக்கு, தமிழக சட்டமன்ற சபாநாயகர், துணைசபாநாயகர் பதவிகள் யாருக்கும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு திமுக எம்எல்ஏக்களிடையே ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.  முதல்வராக மு.க.ஸ்டாலின் மற்றும் 33 அமைச்சர்களுடன்கூடிய 34 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று காலை பதவி ஏற்றுள்ளது.  பதவி ஏற்பு விழா  கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெற்றது.

பின்னர் மதியம் 12மணிக்கு மேல் முதல்வர் பொறுப்பு ஏற்க தலைமைச்செயலகம் வந்த அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. தலைமைச் செயலக வளாகத்தில் காவலர் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டார். பின்னர் ஸ்டாலினை  தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் முதலமைச்சர் அறைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் முதலமைச்சருக்கான இருக்கையில் அமர்ந்து, 5 உத்தரகளுக்கான கோப்புகளுக்கு கையெழுத்திட்டு சாதனை படைத்தார்.

இந்த நிலையில், திமுகவில் அடுத்தக்கட்ட பதவிகளை பிடிக்க எம்எல்ஏக்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழக சபாநாயகர் பதவி, துணை சபாநாயகர் பதவி மற்றும் சட்டமன்ற திமுக கொறடா போன்ற பதவிகள் யாருக்கு கிடைக்கும் என்று பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஆனால்,  தமிழக சபாநாயகராக மூத்த சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு-வை நியமிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாகவும், துணை சபாநாயகர் பதவி முன்னாள் அமைச்சர் பிச்சாண்டிக்கும், கொரோனா பதவி, பனை மரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.