2023ம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை தோற்கடித்து உலக்ககோப்பையைக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி.

இந்த வெற்றியை ஆஸி அணியினர் கொண்டாடி மகிழ்ந்த புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியானது.

அதில் கேப்டன் பேட் கம்மின்ஸ் உடன் கோப்பையுடன் இருந்த பெண் யார் எனற கேள்வி எழுப்பப்பட்டது.

அவர் அந்த அணியின் மேலாளர் ஊர்மிளா ரொசாரியோ என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரைச் சேர்ந்த ஐவி மற்றும் வேலண்டைன் ரொசாரியோ ஆகியோருக்கு தோகா-வில் பிறந்த இவர் டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தார்.

சிறுவயது முதல் விளையாட்டுத் துறையில் ஆர்வம் காட்டி வந்த நிலையில் டென்னிஸ் விளையாட்டில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாத ஊர்மிளா விளையாட்டு நிர்வாகத்தை தேர்ந்தெடுத்தார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த ஊர்மிளா ஆஸி மகளிர் கிரிக்கெட் அணியின் மேலாளராக செயல்பட்டு வந்ததையடுத்து அவருக்கு உலகக்கோப்பை தொடரில் விளையாடிய ஆஸி ஆடவர் அணியை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.

ஊர்மிளா ரொசாரியோ சமீபத்தில் நடைபெற்ற கத்தார் உலக்ககோப்பை கால்பந்து போட்டியின் போது ஒரு ஸ்டேடியத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.