திருவனந்தபுரம்

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் கேரள கிரிக்கெட் அணியின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நடிகையான கீர்த்தி சுரேஷ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.

தற்போது கேரளா மகளிர் கிரிக்கெட் அணியின் நல்லெண்ண தூதராக கீர்த்தி சுரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கேரளா கிரிக்கெட் சங்கம்(கேசிஏ) நிகழ்வில், நல்லெண்ண தூதராகக் கீர்த்தி சுரேஷ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும் திருவனந்தபுரத்தில் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா – ஆஸ்திரேலியா டி20 போட்டிக்கான இணையதள டிக்கெட் விற்பனையையும் கீர்த்தி சுரேஷ் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியின் போது கீர்த்தி சுரேஷ் கேரளா மகளிர் கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அணிந்து வீராங்கனைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.