
பெங்களூரு,
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஜெயலலிதாவின் தோழி சசிகலா.
சிறையில் சசிகலாவுக்கு பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த வசதிகள் செய்தது கொடுத்த அதிகாரி குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.
சிறையில் தனக்கு தேவையான வசதிகள் பெற, சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் கொடுத்து, சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது, கர்நாடக சிறைத்துறை டிஜஜி ரூபா ஆய்வின்போது தெரியவந்தது.
மேலும், சசிகலாவுக்கு சலுகைகள் அளிப்பதற்காக பணம் கைமாறியது குறித்து உயர் அதிகாரி களுக்கு டிஐஜி ரூபா கடிதம் எழுதினார். இந்த கடிதம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து சிறை அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டனர். ரூபாவும் பெங்களூரு போக்கு வரத்து துறைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ரூபா, தனது ஆய்வு அறிக்கை உண்மை என்றும், தனக்கு கிடைத்த கடிதம் மற்றும் தகவல் காரணமாக, லஞ்ச பணம் கைமாறியதைக் கண்டுபிடித்ததாகவும் டிஐஜி ரூபா தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகள் குறித்து முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா கூறியிருப்பதாவது,
பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் சொகு சாக இருந்து வருவதாகவும் சக கைதிகள் பலர் என்னிடம் கூறினர். எனக்கு தகவல் கொடுத்ததற்காக, அந்த கைதிகளை வேறு சிறைகளுக்கு சிறை அதிகாரிகள் மாற்றி விட்டனர்.
இந்நிலையில், டி.டி.வி.தினகரனின் நெருங்கிய நண்பரான மல்லிகார்ஜுனா மூலம் கர்நாடகத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு ரூ.2 கோடி கைமாற்றியுள்ளதாக தகவல் கிடைத்தது. முதலில் அதை நான் நம்பவில்லை.
இதற்கிடையில் எனக்கு ஒரு அநோமதேய கடிதம் வந்தது. அந்த கடிதம் பரபரப்பன அக்ரஹா சிறையில் இருந்து வந்திருந்தது. அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து நான் ஆராய்ந்தேன். அப்போதுதான் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.
பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விஐபி கைதிகளுக்கு தேவையான உதவிகளை அடிஷனல் டிஜிபி மேகரிக் மற்றும் சிறை அதிகாரிகள் சசிகலா மட்டுமின்றி,
சுரங்க ஊழல் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி கங்கரங்கம் பதேரியா, எஸ்.ஜே. ஜெயச்சந்திர,
ரூ. 5 கோடி பண மாற்று மோசடியில் சிறை பிடிக்கப்பட்ட மாநில நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின் திட்ட அலுவலர்,
டிரீட்ஜ் இன்ஃப்ரா திட்டம் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சச்சின் நாயக் மற்றும் அவரது மனைவி திஷா சௌத்ரி
ஆகியோருக்கு உயர் தர சிறப்பு சிகிச்சை அளிக்கபட்டு வந்தது தெரிய வந்தது,
இதற்கு பெரும் உதவியாக இருந்தது, சிறைச்சாலை பாதுகாப்பை கவனித்து வரும், கர்நாடக தொழில்துறை பாதுகாப்பு படை (கே.எஸ்.எஸ்.எஃப்) துணை இன்ஸ்பெக்டர் கஜராஜ் மகுநர் என்பது தெரிய வந்தது.
இவர் மூலமே , அ.தி.மு.க. தலைவர்கள் சிறைக்குள் சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுத்து தெரிய வந்தது என்றும்,
இதுதொடர்பாக நான் ஆய்வு மேற்கொண்டபோது பல தகவல்கள் தெரிய வந்தது. இதற்கு மூல காரணமாக இருப்பவர் ஜெயில் விசிட்டர்ஸ் பிரிவு பொறுப்பாளராக இருக்கும் கேஎஸ்எப் சப் இன்ஸ் பெக்டர் என்பது தெரிய வந்தது.
கேஎஸ்எப் எஸ்.ஐ. கஜராஜ் மகுநர், சிறையில் உள்ளவர்களை பார்க்க வரும் விசிட்டர்ஸ் பிரிவின் பொறுப்பாளராக இருக்கிறார்.
இவர் முன்னாள் ஜெயில் சூப்பிரடண்ட் கிருஷ்ணகுமாரின் அலுவலகத்தில், சிறை பார்வையாளர் நேரம் முடிவடைந்த பின்பும், அதிமுக எம்.பி., எம்எல்எக்கள் சசிகலாவை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளது தெரிய வந்தது.
ஆனால், சிறைத்துறை டிஜிபியோ, சசிகலாவை விசிட்டர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே சந்திக்க முடியும் என்று கூறி உள்ளதாக ரூபா கூறியுள்ளார்.
பி.எஸ்.ஐ. எஸ்ஐ கஜராஜ் மகுனர், சிறையினுள் தனி அறை ஒதுக்கி உள்ளதாகவும், அந்த அறை யில் சசிகலா உபயோகத்துக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பொருட்கள், தனி சமையலறை, பிரிட்ஜ் ஆகியவை இருந்தாகவும், டிஐஜி ரூபா ஆய்வின்போது தெரிய வந்தது.
சசிகலாவுக்கு இந்த வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்ததற்காக, சிறை அதிகாரி மகுனர் மற்றும் சிறை அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக லஞ்சம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு டிஐஜி ரூபா கூறி உள்ளார்.
[youtube-feed feed=1]