சென்னை:

னக்கு அறிவுரை சொல்ல தங்க.தமிழ்ச்செல்வன் யார்? யாரையும் பொறுப்பில் இருந்து நீக்க அச்சமோ, தயக்கமோ இல்லை என்று டிடிவி தினகரன் அதிரடியாக கூறினார்.

டிடிவி தினகரனின் அமமுகவில் உட்கட்சி பூசல் எழுந்துள்ள நிலையில், டிடிவிக்கும், அவரது வலதுகரமான தங்கத்தமிழ் செல்வனுக்கும் இடையே முட்டல் மோதல் தொடங்கியது. இதை யடுத்து, டிடிவி தினகரனை ‘பொட்டப்பய’ கடுமையான வார்த்தைகளால் தங்கத்தமிழ் செல்வன் வசைபாடிய ஆடியோ வெளியாகி தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், ஆடியோ விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தங்கத்தமிழ்செல்வன் அதற்கு வருத்தம் தெரிவிக்க மறுத்ததோடு, தன்னை கட்சியில் இருந்து நீக்கிக்கொள்ளுங்கள் என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, தேனி மாவட்டத்தை சேர்ந்த அமமுகவினர் கூட்டத்துக்கு டிடிவி தினகரன் ஏற்பாடு செய்தார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை அவசர கூட்டம் நடைபெற்றது. அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தங்கத்தமிழ்செல்வனை கடுமையாக சாடினார்.

அமமுக கட்சி  யாரையும் பொறுப்பில் இருந்து நீக்க அச்சமோ, தயக்கமோ இல்லை என்று கூறிய  டிடிவி தினகரன், எனக்கு அறிவுரை சொல்ல தங்க.தமிழ்ச்செல்வன் யார்? என கேள்வி எழுப்பினார்.

இன்று காலை நடைபெற்றது அவசர ஆலோசனைக் கூட்டம் கிடையாது, ஏற்கனவே திட்டமிடப் பட்டது என்று கூறியவர், தங்கத்தமிழ்செல்வன் மீது ஏற்கனவே புகார வந்ததாகவும், அப்போதே, ஜூன் 25-ம் தேதி சென்னைக்கு வாருங்கள் பேசுவோம் என அவரிடம் தெரிவித்தேன்.

அதன்பிறகு அவரது ரேடியோ பேட்டி குறித்து, நேரில் அழைத்துப் பேசினேன், அப்போது,  கேள்விகளுக்குப் பதில் தெரிந்தால் மட்டும் பேசுங்கள் இல்லையேல் பேசாதீர்கள் எனக் கூறினேன். இனிமேல் எந்தப் பேட்டியில் எப்படிப் பேச வேண்டும் என்றும் அவருக்குச் சொல்லிக் கொடுத்த தாகவும்,  இனி அதிகமாகப் பேட்டி அளிக்க வேண்டாம் என்றும் அவரிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.

ஆனால் அவர் எனது பேச்சைகேட்காமல் ‘ தொலைக்காட்சி பேட்டியில் மீண்டும் கடுமையாகப் பேசியுள்ளார். இந்த நிலையில்தான் தங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ வெளியாகியுள்ளது.

தங்கத்தமிழ் செல்வன்  பேசியது எனது உதவியாளரிடம் இல்லை என மறுத்த டிடிவி தினகரன், அவர்  மதுரை நிர்வாகி செல்லபாண்டியனிடம்தான் அவ்வளவு ஆவேசமாகப் பேசியுள்ளார்.

அவர் பேசியிருப்பதுபோல, தமிழ்ச்செல்வன் விஸ்வரூபமெல்லாம் எடுக்கமாட்டார். என்னைப் பார்த்தால் பொட்டி பாம்பாக அடங்கிவிடுவார். விஸ்வரூபம் குறித்து அவர் இரவு நேரத்தில் பேசியதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது. அவர் பேசாமல் எங்களுடன் வராமல் எடப்பாடி பழனிச்சாமியிடமே இருந்திருக்கலாம்.

நிர்வாகிகள் என்னிடம் புகார் அளித்த போதே அவரை அழைத்து எச்சரித்தேன். இதே புகார் தொடர்ந்து நீடித்தால் கட்சியிலிருந்து நீக்கப்படுவீர்கள் என அவரிடமே கூறினேன். அவரை நீக்க வேண்டும் என்பது முன்னரே எடுக்கப்பட்ட முடிவுதான் என்று கூறியவர்,  கட்சி நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளது குறித்து சின்னமாவிடம் பேச வேண்டியிருந்ததால் நாங்கள் இவரைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அதனால்தான், நீக்கம் குறித்து இதுவரை எதுவும் அறிவிக்கவில்லையே தவிர அவர் கூறுவது போல் பயம் எதுவும் இல்லை என்று மறுத்தார்.

தேர்தல் வேட்பாளர் அறிவிக்கும் போது அமைதியாக இருந்துவிட்டு இப்போது குறை கூறுகிறார். அப்போதே சொல்லியிருக்கலாமே. அவர் என்னிடம் நேராக எதையும் பேச மாட்டார். ஆனால் தொலைக்காட்சி, கட்சி நிர்வாகிகள் என அனைவரிடமும் ஆவேசமாகப் பேசுவார். அவர் சுபாவமே அதுதான். தினமும் ஒவ்வொரு மனநிலையுடன் இருப்பார்.

இனிமேல் தங்க தமிழ்ச்செல்வனிடம் விளக்கம் கேட்கவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. அவர் மனதில் எதை வைத்துக்கொண்டு இப்படிப் பேசுகிறார் என அனைவருக்கும் தெரியும். அவர் பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள். அது யார் என விரைவில் நீங்கள் அனைவரும் பார்க்கப் போகிறீர்கள். விரைவில் அவர் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவார். அவர் பொறுப்பிற்கு மற்றொருவர் நியமிக்கப்படுவார்.

மேலும் ஜூலை 1ந்தேதி சட்டமன்றத்தில் கொண்டு வரப்படும்  சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பேன்.

இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.