நீதியின் காவலர்க்கு புத்தி சொல்லப்போவது யார்?  கமல் காட்டமான கேள்வி

Must read

 

சென்னை,

நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற தாக்குதல் குறித்து, நீதியின் காவலர்க்கு புத்தி சொல்லப்பவோது யார் என்று கமல் கேட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

‘சென்னை மெரீனா கடற்கரை பகுதியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுவர்களை நேற்று காலை முதலே போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். வேளியே மறுத்த போராட்டக்காரர்களை தடியடி மூலம் வெளியேற்றினர்.  இதன் காரணமாக சென்னை மாநகரம் முழுவதும் காலிகளாட்ல வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறின.

திருவல்லிக்கேணியில் உள்ள ஐஸ்ஹவுஸ்  காவல்நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டது. அருகிலிருந்த வாகனங்கள் தீக்கிரையாயின.

சென்னை மயிலாப்பூரில் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் பதற்றம் அதிகரித்துக்கொண்டே போனது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீஸ் நடத்திய தடியடியில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர்.

தடியடியைக் கண்டித்து பல பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தினர். இது திட்டமிட்ட வன்முறை என்றும், அரசியல் கட்சிகளின் தூண்டுதல் பேரில் ரவுடிகள் நடத்திய அராஜகம் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இதுகுறித்து, தனது  டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன்,

“நன்றி கனம். நீதிபதிகளே.  நீதியும்! சட்டமும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டன. நீதியின் காவலர்க்கு புத்தியோ நீதியோ சொல்லப்போவது யார்?” கேள்வி எழுப்பியுள்ளார்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article