1
றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நண்பரும், நடிகரும், பத்திரிகை அதிபர் மற்றும் ஆசிரியருமான சோ ராமசாமி  சற்று நேரத்துக்கு முன் மறைந்தார். அவருக்கு வயது 82.
ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அதே அப்பல்லோ மருத்துவமனையில் சோ ராமசாமியும் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் உடல் நிலை மோசமான தகவலை அறிந்த சோவுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார் சோ. அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சற்று நேரத்துக்கு முன் மறைந்தார்.
சென்னையைச் சேர்ந்த ரா.சீநிவாசன், ராஜம்மாள் தம்பதிக்கு மகனாக அக்டோபர் 5, 1934 அன்று பிறந்த சோ ராமசாமியின் இயற் பெயர் ராமசாமி.
இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். , பிறகு லயோலா கல்லூரியிலும் விவேகானந்தா கல்லூயிரியிலும் பயின்று இளநிலைஅறிவியல் (பி.எஸ் சி) பட்டம் பெற்றார்.  பிறகு  சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல் பட்டம் பெற்றார்.
சிறிது காலம், சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குரைஞராக பயின்ற சோ ராமசாமி, பிறகு  டி.டி.கே  நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராக நீண்டகாலம் பணியாற்றினார்.
இவருக்கு மனைவியும் ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
பகீரதன் எழுதிய “தேன்மொழியாள்” என்ற நாடகத்தில் ’சோ’ எனும் பெயரிலான பாத்திரத்தில் ராமசாமி நடித்தார். அது முதல் “சோ” ராமசாமி என அழைக்கப்பட்டார்.

"மு. பி. து" நாடக்ததில்..
“மு. பி. து” நாடக்ததில்..

நாடகங்களில் நடிப்பதோடு, நாடகங்கள் எழுதுவதிலும் சோ ஈடுபட்டார்.  “முகமது பின் துக்ளக்” உட்பட பல்வேறு நாடகங்களை எழுதி, நடித்து புகழ் பெற்றார்.
இந்நாடகம் பின்னாட்களில் திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது.  பிரபல நடிகர்கள் பலருடன் இணைந்து நகைச்சுவை வேடங்களில் திரைப்படங்களில் நடித்தார்.
14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார்.
1970 ஆம் ஆண்டு “துக்ளக்” என்ற பெயரில் வார இதழைத் தொடங்கினார்.  தனது அரசியல் கருத்துக்களை இந்த இதழில் எழுதிவந்தார். பின்னர் 1976ஆம் ஆண்டில் PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார்.
"சோ" வை நலம் விசாரித்த மோடி ( கோப்பு படம்)
“சோ” வை நலம் விசாரித்த மோடி ( கோப்பு படம்)

இந்திய அளவில் முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரையும் அறிந்தவர் சோ ராமசாமி. இவரது முயற்சியால் பல்வேறு அரசியல் திருப்பங்கள், ஆட்சி மாறறங்கள் ஏற்பட்டுள்ளன. மிகச் சிறந்த நகைச்சவை நடிகர், எழுத்தாளர், அரசியல் நையாண்டி செய்வதில் வல்லவர் என்றெல்லாம் புகழப்படுபவர் சோ ராமசாமி.
அதே நேரம், “பிராமண பற்றாளரான இவர் சாதி வேறுபாடுகளை விரும்புபவர்,  இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்,  ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக கருதப்பட்டும் மிடாஸ் சாராய ஆலை உட்பட ஒன்பது நிறுவனங்களுக்கு பொறுப்பு வகித்தவர், பெண் சமத்தவத்தை விரும்பாதவர், பிரச்சினைகளை கிளறிவிடுவாரே தவிர அதற்கு தீர்வு சொல்லமாட்டார்” என்பன போன்ற விமர்சனங்களும் இவர் மீது உண்டு.
பாராட்டும் விமர்சனமும் கலந்து இருந்தாலும், தமிழக அரசியலிலும், திரையுலக நகைச்சுவையிலும், பத்திரிகைத் துறையிலும் தவிர்க்க முடியாத நபர், சோ ராமசாமி.