சோ தம்பதியிடம் ஆசி பெறும் ஜெ.,
சோ தம்பதியிடம் ஆசி பெறும் ஜெ.,

ஜெயலலிதாவின் நண்பரும், நடிகரும், பத்திரிகை அதிபர் மற்றும் ஆசிரியருமான சோ ராமசாமி காலமானார்.
ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அதே அப்பல்லோ மருத்துவமனையி்ல் சிகிச்சை பெற்று வந்தார் சோ.  ஜெயலலிதாவின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்ட்டதை அறிந்த சோவின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட சோ, தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மரணமடைந்தார்.
3
“ஜெயலலிதாவும் சோவும் மிக நெருங்கிய நண்பர்கள். சோவை தனது சகோதரர் என நெகிழ்வுடன் ஜெயலலிதா சொன்னது உண்டு. இந்திய அளவில் கிட்டதட்ட அனைத்து முக்கிய அரசியல்வாதிகளுடன் தொடர்பில் இருந்தவர் சோ.  அதே நேரம், ஜெயலலிதா மீது மிகுந்த சகோதரப்பாசம் கொண்டவர். ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆலோசகராக செயல்பட்டார்.
யாருக்கும் தலைவணங்காத  இரும்பு மனுஷி என்று பெயர் பெற்று மறைந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. சோ வின் 60 மற்றும் 80ம் வயது விழாக்களின் போது, காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.
4
போயஸ் கார்டனில் இருந்து சசிகலாவை ஜெயலலிதா வெளியேற்றிய நேரத்தில், ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக சொல்லப்பட்ட “மிடாஸ்” சாராய ஆலை உட்பட சில நிறுவனங்களுக்கு சோ பொறுப்பாளராக இருந்தார்.
சோ உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, ஜெயலலிதா நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இறுதி வரை ஜெயலலிதாவுக்கு அரசிரயல் ஆலோசகராக விளங்கி சோ, ஜெயலலிதா மறைந்த மறுநாளே மறைந்திருக்கிறார்.  ஜெயலலிதா போலவே மாரடப்பே, சோவின் மரணத்துக்குக் காரணமாக இருந்துவிட்டது.
ஜெயலலிதாவின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது என்பதை அறிந்த சோவின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்படவே, அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு அப்படியே உயிர் பிரிந்துவிட்டது.
ஜெயலலிதா மரணடைந்த விசயம், கடைசி வரை சோவுக்கு தெரியாது.